மிகப்பெரிய அப்டேட்.. வருகிறது புத்தம் புதிய ஹீரோ பைக்.. இவ்வளவு வசதிகளா? ப்பா சூப்பர்!
சென்னை: ஹீரோ நிறுவனத்தின் புதிய அப்டேட் மாடல் Xtreme 160R இந்த மாதம் வெளியிடப்பட உள்ளது. பல்சர், அப்பாச்சி நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த புதிய மாடல் Xtreme 160R அப்டேட் செய்யப்பட்டது.
Bajaj Pulsar P150, Bajaj Pulsar N160 மற்றும் PURE EV EcoDryft ஆகிய பைக்குகள் ஹீரோவின் Xtreme 160R பைக்கிற்கு போட்டியாக உள்ளது. Xtreme 160Rஐ விட இந்த பைக்குகளின் விற்பனை அதிகம் உள்ள நிலையில், அந்த நிறுவனங்களுக்கு போட்டியாக Xtreme 160R அப்டேட் செய்யப்பட்டு இந்த மாதம் களமிறக்கப்பட உள்ளது.

வரவிருக்கும் 2023 Xtreme 160R ஸ்டைலிஸ் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முக்கியமாக USD மற்றும் தலைகீழாக மாற்றப்பட்ட ஃபோர்க்குகள், மாற்றப்பட்ட ஸ்பீடோமீட்டர் கன்சோல் மற்றும் உயர்த்தப்பட்ட பவர், டார்க் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பஜாஜ் 160சிசி மாடல்களைப் போலவே இதன் செயல்திறனையும் உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
Hero Xtreme 160R இன்ஜின் - ஹீரோ XSense உடன் கூடிய 163cc எஞ்சின் இதில் உள்ளது. ஏர்-கூல்டு, BS6-இன்ஜின் மற்றும் அதிநவீன புரோகிராம் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் இந்த பைக்கில் அமைந்து உள்ளது. 6500 ஆர்பிஎம்மில், இந்த இன்ஜின் அதிகபட்சமாக 14.2 என்எம் டார்க் மற்றும் 15.2 பிஎஸ் பவர் உற்பத்தி செய்யும் வகையில் இந்த எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட் மாடலில் புதிய ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் புதிய வகை ஜிபிஎஸ் கனெக்ட்டிவிட்டி கொண்டு உள்ளது. பல்சர் N160 மாடல்களில் சிறப்பான கனெக்ட்டிவிட்டி உள்ள நிலையில் இதிலும் அதே கனெக்ட்டிவிட்டி கொண்டு வரப்பட்டு உள்ளது. Xtreme 160R அப்டேட் செய்யப்பட்ட மாடலில் வண்டியை திருடினாலோ, யாரவது கள்ள சாவி போட முயன்றாலோ, டோ செய்து யாரும் எடுத்து சென்றாலோ அதற்கு சிக்னல் காட்டும்.
அதேபோல் வண்டி ஓட்டி முடித்த பின் எவ்வளவு எக்கனாமியுடன் ஓட்டினீர்கள் என்பது உள்ளிட்ட ரிப்போர்ட் கொடுக்கும்.

கலர்கள்: இந்த முறை Xtreme 160Rல் புதிய கலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. Sports Red, Matte Black, Pearl Silver White, Stealth2.0, ,மற்றும் Black ஆகிய கலர்களில் இந்த மாடல்கள் கிடைக்கும்.
இந்தியாவில் Hero Xtreme 160R BS6 விலை ரூ. 1.19 லட்சம் மற்றும் ரூ. 1.30 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Hero Xtreme 160R BS6 வகைகள் 1.19 லட்சம் - சிங்கிள் டிஸ்க் தொடங்கி 1.30 லட்சம்- ஸ்டீல்த் வேரியண்ட் 2.0. Hero Xtreme 160R BS6 வரை செல்லும். இந்த பைக்கை வாங்க பல்வேறு வங்கிகள் மூலம் 7.75 முதல் 16.35% வரை வட்டி விகிதங்களுடன் EMI லோன் வழங்குகிறது.
விலை : எக்ஸ்ட்ரீம் 160ஆர் சிங்கிள் டிஸ்க் - ₹ 118350, எக்ஸ்ட்ரீம் 160ஆர் டபுள் டிஸ்க் - ₹ 121700, எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் - ₹ 123515, எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் 2.0 - ரூ 129222 வரை விற்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications