ஒரே அழுத்துதான்.. 40 கிமீ மைலேஜ் தரும்.. ஜம்முனு போகலாம்.. கார் உலகில் மாருதியின் புது புரட்சி!
சென்னை: 40 kmpl எரிபொருள் திறனுடன் இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் காராக மாருதி ஸ்விஃப்ட் கார் மாற உள்ளது. இந்திய வாகன பயன்பாட்டில் இது புதிய புரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். முக்கியமாக மைலேஜை விரும்பும் இந்திய மக்கள் இடையே இ மின்சார வாகனங்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்திய கார் மற்றும் பைக் சந்தையில் எப்போதும் எரிபொருள் திறன் அதாவது மைலேஜ் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனங்களையே மக்கள் அதிகம் விரும்புவார்கள் என்ற நிலை உள்ளது.
மாருதி கார்: இந்த நிலையில்தான் 40 kmpl எரிபொருள் திறனுடன் இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் காராக மாருதி ஸ்விஃப்ட் கார் மாற உள்ளது.
இது தொடர்பாக மாருதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களில் ஹைப்ரிட் எஞ்சின் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தைக்கு வந்தாலும், ஹைபிரிட் கார்களுக்கும் கிராக்கி இருக்கும் என்று மாருதி கருதுகிறது. இதனால் அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைபிரிட் கார்களை சந்தைக்கு கொண்டு வர மாருதி விரும்புகிறது.
எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதில் இருந்து விலகி இருக்கும் மாருதி சுஸுகி, ஹைபிரிட் கார்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் போன்ற பிரபலமான கார்களில் ஹைப்ரிட் வகைகளை கொண்டு வரும் முடிவில் மாருதி இறங்கி உள்ளது.
இந்தியாவில் ஹைப்ரிட் வகையான கிராண்ட் விட்டாராவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, மாருதி சுஸுகி, ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் ஹைப்ரிட் வகைகளை கொண்டு வரும் முடிவில் இறங்கி உள்ளது. அடுத்த வருடம் மார்கெட்டிற்கு வரும் இந்த கார்கள் மிக அதிக மைலேஜ் கொண்டதாக இருக்கும்.
இந்த கார் ஹைப்ரிட் என்பதால் குறிப்பிட்ட வேகத்திற்கு பெட்ரோலிலும், மீதி வேகத்திற்கு எலக்ட்ரிக் வாகனமாகவும் இயங்கும். 1.2-liter three-cylinder engine இதில் இடம்பெற உள்ளது. தற்போது, ஸ்விஃப்ட் 22.56 கிமீ/லி என்ற மைலேஜை கொண்டுள்ளது, அதே நேரத்தில் டிசையர் 24.1 கிமீ/லி மைலேஜ் உடன் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிராண்ட் விட்டாராவின் ஹைப்ரிட் மாடல் 27.97 கிமீ/லி மைலேஜை எட்டுகிறது. ஸ்விஃப்ட் மற்றும் டிசையரின் ஹைப்ரிட் மாடல் வகைகள், 35 முதல் 40 கிமீ/லி மைலேஜ் வரை கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாருதி ஸ்விஃப்ட் 5 இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் காரின் விலை ரூ. 5.99 - 9.03 லட்சம் உள்ளது. இந்த நிலையில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையரின் ஹைப்ரிட் மாடல் வகைகள் இதைவிட 2 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக இருக்கும் என்கிறார்கள். மைலேஜ் உயரும் நிலையில் விலையும் அதனால் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வருடம் முதல் காலாண்டில் இந்த வாகனங்கள் மார்கெட்டிற்கு வர வாய்ப்புகள் உள்ளன. இந்திய வாகன பயன்பாட்டில் இது புதிய புரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications