ரூ.18 கோடி அதிசயம்.. பெங்களூர் - சென்னை நெடுஞ்சாலையில் செல்கிறீர்களா? ஆச்சர்யத்தில் மூழ்க போறீங்க!
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 44) புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. இங்கே கட்டப்படும் எக்ஸ்பிரஸ் வே திறக்கப்படுவதற்கு இன்னும் பல காலம் எடுக்கும் என்பதால்.. ஏற்கனவே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 44ல் பல புதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அங்கே புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) பராமரிக்கப்பட்டு வரும், பெருமுகை கிராமத்தில், கடந்த பிப்ரவரி மாதம் பழுதுபார்க்கும் பணி தொடங்கிய நிலையில் தற்போது அங்கே போக்குவரத்துக்காக புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக NHAI அதிகாரிகள் கூறுகையில், நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் முன்பு பாலம் பணிக்காக திருப்பி விடப்பட்ட நிலையில் தற்போது பாலம் திறக்கப்பட உள்ளது. புதிய பாலம் மற்றும் அதன் சுரங்கப்பாதையை திறக்க உள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால்.. விபத்துகளைத் தடுக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் ஒரு பகுதி தற்போது திறக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பகுதி விரைவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கே தற்போது பெயிண்ட் அடிக்கும் பணிகள், மார்க்கிங் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. நெடுஞ்சாலையின் இருபுறமும் சேவை பாதைகள் அமைக்கப்பட்டு வருவதால் விரைவில் அங்கும் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் ராணிப்பேட்டை இடையே உள்ள பெருமுகை கிராமத்தில் 18 கோடி ரூபாயில் இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. பாலத்திற்கு கீழே மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் கீழே அண்டர் பாஸ் அமைக்கப்பட்டு உள்ளது.
இது போக 262-கிமீ நீளமுள்ள பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை (BCE) முடிவடையும் தருவாயில் உள்ளது. பல இடங்களில் பணிகள் முடிந்தாலும் கூட .. இன்னும் சில இடங்களில் இன்னும் பணிகள் முடியாமல் உள்ளன. அரைகுறையாக முடிந்த பணிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை பெங்களூர் இடையிலான தற்போதைய பயண நேரமான ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துடன் ஒப்பிடும்போது, பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இந்த புதிய சாலை இரண்டு முதல் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 80 கி.மீ வரை குறைக்கும். அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 கி.மீ.
BCE திட்டம் என்று அழைக்கப்படும் சென்னை - பெங்களூர் சாலை அதிகாரப்பூர்வமாக NE-7 என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும்.
எந்த ரூட்: பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையை டிசம்பர் 2024 க்கு முன் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17,930 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்லும். ஹோஸ்கோட், மாலூர், பங்காரப்பேட்டை, கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், வெங்கடகிரிகோட்டா, பலமனேர், பங்காருபாலம், சித்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகரங்கள்.












Click it and Unblock the Notifications