எக்ஸ்பிரஸ் வேயில் இப்படிலாம் செய்ய மாட்டார்களே.. பெங்களூர் சென்னை விரைவுச்சாலையில்.. பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் சென்னை விரைவுச்சாலையில் அவசரத்திற்கு யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவசர கால தேவைகள், போக்குவரத்து மாற்றங்களை சமாளிப்பதற்காக யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக எக்ஸ்பிரஸ் வே சாலைகளில்.. இப்படி யூ டர்ன் எடுக்கும் வசதிகள் இருக்காது. ஆனால் சென்னை பெங்களூர் சாலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலையில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டு உள்ளது.

automobile

இதில் கர்நாடக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அது தமிழ் அதிகம் பேசும் இடங்களாக இருந்தாலும் தமிழில் தகவல் பலகைகள் வைக்கப்படவில்லை. அதே போல் தமிழ்நாட்டு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அது கன்னடம் அதிகம் பேசும் இடங்களாக இருந்தாலும் கன்னடத்தில் தகவல் பலகைகள் வைக்கப்படவில்லை. மாறாக இந்தி மூன்றாவது மொழியாக வைக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக சென்னை 10 கிமீ என்று கர்நாடக எல்லையில் இந்த எக்ஸ்பிரஸ் வே சாலையில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது. சென்னை 10 கிமீ தூரத்தில் இருந்தாலும் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இந்தி - ஆங்கிலம் - கன்னடத்தில் பலகை உள்ளது. தமிழ்நாடு எல்லைக்குள் கன்னடம் இல்லாமல் போய் உள்ளது. இந்தி பயன்படுத்த வேண்டும் என்பதால் தமிழ் - கன்னடம் முக்கியமான இடங்களில் புறக்கணிக்கப்பட்டு உள்ளன .

சாலை வேக கட்டுப்பாடு: இந்த சாலையில் கார்களுக்கு 100 கிலோ மீட்டர் வேகமும், பேருந்துகளுக்கு 120 கிலோ மீட்டர் வேகமும் லிமிட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை NH-7 என்று அழைக்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் exclusive புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

சாலை தொடக்கம்: தமிழ்நாடு பகுதியில் 70% பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதம் உள்ள பணிகள் நடக்க உள்ளன. இதனால் கர்நாடக பகுதிகள் மட்டும் முதல் கட்டமாக திறக்கப்பட உள்ளது. இந்த மாதம் இந்த சாலை திறக்கப்பட உள்ளது.

262-கிமீ நீளமுள்ள பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை (BCE) முடிவடையும் தருவாயில் உள்ளது. BCE திட்டம் என்று அழைக்கப்படும் சென்னை - பெங்களூர் சாலை அதிகாரப்பூர்வமாக NE-7 என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும். இதில் கர்நாடக பகுதி அடுத்த மாதம் அல்லது டிசம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.

தற்போதைய பயண நேரமான ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துடன் ஒப்பிடும்போது, ​​பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இந்த புதிய சாலை இரண்டு முதல் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 80 கி.மீ வரை குறைக்கும். அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 கி.மீ.

எந்த ரூட்: பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையை டிசம்பர் 2024 க்கு முன் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17,930 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்லும். ஹோஸ்கோட், மாலூர், பங்காரப்பேட்டை, கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், வெங்கடகிரிகோட்டா, பலமனேர், பங்காருபாலம், சித்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகரங்கள்.

இந்த நெடுஞ்சாலை 240 கிமீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையாக இருக்கும், மீதமுள்ளவை 22 கிமீ உயரம் கொண்ட உயர்மட்ட 8 வழி சாலையாக இருக்கும். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 21 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலை, சுமார் ₹5,850 கோடி செலவில் கட்டப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்திற்கு சரக்குகள் தொடர்ந்து வருவதை உறுதி செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+