2023 ஆம் ஆண்டின் பெஸ்ட் வாகனங்கள்: 'ஏசர் ஃபாஸ்டர்' விருதை தட்டி சென்ற கார், பைக்குகளின் லிஸ்ட்
சென்னை: 2023 ஆம் ஆண்டின் சிறந்த வாகனங்களை பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்து FASTER கூட்டமைப்பு விருது வழங்கியுள்ளது. இதன்படி 2023 ஆண்டின் சிறந்த பைக் என்ற விருதை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பெற்றுள்ளது.
இந்தியாவில் கார் - பைக் உள்ளிட்ட ஆட்டோ மொபைல் செய்திகளை வழங்கும் தளங்கள் இணைந்து FASTER என்ற விருது அமைப்பை உருவாக்கி உள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடா, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த FASTER கூட்டமைப்பு தளங்கள் ஆட்டோ மொபைல் குறித்த செய்திகளை வழங்கி வருகின்றன. இந்த கூட்டமைப்பில் ஒன்இந்தியாவின் ஆட்டோமொபைல் தளமான டிரைவ்ஸ்பார்க் அங்கமாக செயல்பட்டு வருகிறது.

இந்த FASTER அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கார்- பைக் மாடல்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023- ஆம் ஆண்டுக்கான சிறந்த கார்-பைக் மாடல்களை தேர்வு செய்து விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த விருதுக்கான தகுதியான வாகனங்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. ஃபாஸ்டர் விருது அமைப்பில் அங்கம் வகிக்கும் இணைய தளங்களின் எடிட்டர்கள் இந்த மதிப்பீடு செய்யும் பணியில் பங்கேற்றனர். பல்வேறு வரையறைகளின் அடிப்படையில் மதீப்பீடு செய்யும் பணி நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து, டெல்லி நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை (பிப்.29) விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 250 மில்லியனுக்கு அதிகமான பயனர்களைக் கொண்ட FASTER அமைப்பில் இருந்து வந்த ஜூரிக்கள், தங்கள் அனுபவத்தை வைத்து 2023- ஆம் ஆண்டின் சிறந்த கார் - பைக் உள்ளிட்டவைகளை தேர்வு செய்தனர்.
பல்வேறு கட்ட ஆய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு பின்னர் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 2024ம் ஆண்டு ஏசர் ஃபாஸ்டர் அமைப்பின் சிறந்த கார், பைக் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், சிறந்த ஆளுமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. அதன் முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சிறந்த கார் (Car of the Year): ஹூண்டாய் வெர்னா
சிறந்த பைக்; ராயல் என்பீல்டு ஹிமாலயன்
சிறந்த பிரீமியம் கார் : மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி
சிறந்த பிரீமியம் பைக்; ராயல் என்பீல்டு மீட்டியோர் 650
சிறந்த ஸ்கூட்டர்: ஹீரோ ஜூம்
சிறந்த எலெக்ட்ரிக் கார் : ஹூண்டாய் ஐயோனிக் 5
சிறந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் : ரிவர் இன்டீ

சிறந்த அப்டேட் பெற்ற கார் : கியா செல்டோஸ்
ஆண்டின் சிறந்த ஆட்டோ டெக்னாலஜி: கூல் மற்றும் ஹீட் ஆகிய வசதி கொண்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310
ஆண்டின் சிறந்த இன்டஸ்ட்ரீ பெர்சனாலிட்டி : சிவி. ராமன், மாருதி சுஸுகி.
ஆண்டின் சிறந்த கம்யூனிகேஷன் பெர்சனாலிட்டி : சஞ்ஜீவ் ஹண்டா, மாருதி சுஸுகி.
ஆண்டின் சிறந்த மோட்டார்ஸ்போர்ட் பெர்சனாலிட்டி : ஹரித் நோவா, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கான மோட்டார்ஸ்போர்ட் விளையாட்டு வீரர் ஆவார்.
கௌரவ விருது : மணிஷ் தண்டோன், பஜாஜ் ஆட்டோ.
ஆண்டின் சிறந்த கார்பரேட் பொதுநல திட்டம்: எம்ஜி சேவா (MG Sewa)
ஆண்டின் சிறந்த கார்பரேட் கம்யூனிகேஷன் டீம் : கியா இந்தியா
ஆண்டின் சிறந்த பிஆர் டீம் : ஃப்ளெயிஷ்மேன் ஹில்லர்டு
ஆண்டின் சிறந்த பிஆர் பெர்சனாலிட்டி : சாஹிர் சேத், ஆட்ஃபேக்டர். S
ஆண்டின் சிறந்த ஆட்டோ விளம்பர கேம்பைன் : மாருதி சுஸுகி.












Click it and Unblock the Notifications