சின்ன சின்ன சந்தில் கூட பயன்படுத்தப்படும் பாப்கேட் இயந்திரம்.. தமிழகத்தில் அதிகரிப்பு
சென்னை: சின்ன சின்ன சந்தில் கட்டிடங்களை இடிக்க, சாலைகள் அமைக்க, ஒடுக்கமான பகுதியில் பணிகளை மேற்கொள்ள குட்டி ஜேசிபி என்று அழைக்கப்படும் பாப் கேட் இயந்திரம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
கட்டுமான துறையில் மிகப்பெரிய புரட்சிகள் நடந்து வருகிறது. முன்பெல்லாம் வீடுகள் கட்ட வேண்டும் என்றால், பழைய வீடுகளை இடிப்பார்கள். அதற்கு வேலை ஆட்களை பயன்படுத்தி தான் இடிக்க வேண்டும். அப்படி பழைய கட்டிடங்களை இடிக்க பல லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வாக வந்த வாகனம் தான் ஜேசிபி. மிகப்பெரிய கட்டிடங்கள், கரடுமுரடமான இடங்களை சரி செய்ய ஜேசிபி தான் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைக்கு கருவேல மரங்கள் அதிகமாக கிடக்கும் காடுகள், மரங்கள் அதிகமாக உள்ள காடுகளை அழித்து பிளாட் போடவும் ஜேசிபி தான் பயன்படுத்தப்படுகிறது. ஜேசிபி இயந்திரத்தை ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் வாடகைக்கு எடுத்தால் போதும். நல்ல பிளாட்டை காட்டை அழித்து உருவாக்கிவிட முடியும். அதேபோல் எவ்வளவு மோசமான மேடாக இருந்தாலும் சமன்படுத்திவிட முடியும்.
அதேபோல் ஜேசிபி இருந்தால் சில மணி நேரத்தில் கட்டிடங்களை இடித்து தரைமட்டம் ஆக்க முடியும். அத்துடன் கட்டிட கழிவுகளையும் எளிதாக லாரிகளில் அள்ளிப்போட்டுவிட முடியும். இதேபோல் சாலைகளில் தோண்டவும், வீடுகளுக்கு பள்ளம் தோண்டவும் ஜேசிபி தான் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது..
கோவையில் @akaasi அண்ணன் இதுபோல ஒரு இயந்திரம் செயல்படுவதை காணொளி போட்டிருந்தார். இன்று திருமங்கலம் நகரில் இருக்கும் குறுகலான பகுதிகளிலும் இந்த இயந்திரம் வந்துவிட்டது. அதிகபட்சம் 10-15 அது இருந்தாலே போதும் லாவகமாக எல்லா திசைகளிலும் திரும்பி எஃபெக்டிவாக வேலை செய்கிறது. pic.twitter.com/NVdTTpntUJ
— டீ (@teakkadai1) January 27, 2024
இதனிடையே ஜேசிபியை பொறுத்தவரை பெரிய சாலைகள், நல்ல அகலமான இடங்களில் பணியாற்ற உதவுகிறது. அதேநேரம் 10 அல்லது 15 அடிதான் சாலைகள் உள்ள பகுதிளில் ஜேசிபி நுழைவதில் சிரமம் இருக்கிறது.. இந்நிலையில் சிரமமான, குறுகலான இடங்களில் தற்போது பாப் கேட் இயந்திரம் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பாப்கேட் இயந்திரம் அதிகபட்சம் 10-15 அடி இடைவெளி அல்லது இடம் இருந்தாலே போதும் லாவகமாக எல்லா திசைகளிலும் திரும்பி எஃபெக்டிவாக வேலை செய்கிறது. இதுபற்றிய வீடியோக்கள் சமூக ஊடங்களில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் கும்மிடிப்பூண்டியில் இந்த இயந்திரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்படுகிறது. மிக குறுகிய சாலைகளில் பள்ளம் தோண்ட, கட்டிடங்களை இடிக்க, வீட்டு வேலைகள் செய்ய, தொழிற்சாலை பணிகளில் தற்போது பாப்கேட் இயந்திரம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வரும் காலத்தில் பாப்கேட் இயந்திரம் அதிக அளவில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதன் விலை மாடல்களை பொறுத்தவரை 22 லட்சம் 33 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications