இன்றோடு டைம் ஓவர்.. ஃபாஸ்ட் டாக் வச்சு இருக்கீங்களா? உடனே போங்க.. வருது மிகப்பெரிய மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க புதிய பாஸ்ட் டாக்கில் மாற்றங்களை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. புதிய பாஸ்ட் டாக் விதிமுறைகள் காரணமாக பலரும் பாஸ்ட் டாக்கில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு காலத்தை குறைப்பது மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி நேரத்தை எளிதாக்குவது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உலக வங்கியிடம் பல விவரங்களை தெரிவித்தது. FASTag செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுங்கச்சாவடிகளில் சராசரி காத்திருப்பு நேரம் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது, இது முந்தைய 714-வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமான முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

automobile transport

இந்த நிலையில்தான் புதிய பாஸ்ட் டாக் விதிமுறைகள் நாடு முழுக்க அமலுக்கு வர உள்ளன. புதிய விதிப்படி பின்வரும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்,

1. பாஸ்ட் டாக்கில் லோ பேலன்ஸ் இருந்தால்.. எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது.

2. சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

3. அதாவது டோல் கேட் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால்.. அதை டோல் கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

4. கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். இந்த வாகனங்களின் பாஸ்ட் டாக் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு, சிக்கல் இருந்தால், அதன் காரணமாக பாஸ்ட் டாக்.. பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை 1 மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.

6. பிளாக் லிஸ்ட் ஆகி இருக்கும் பாஸ்ட் டாக் எதையும் டோல் கேட்களில் பயன்படுத்த கூடாது.

FASTag பிளாக் லிஸ்ட் ஆகி உள்ளதா என்று எவ்வாறு சரிபார்க்கலாம்:

• நீங்கள் செல்வதற்கு முன் உங்கள் FASTag செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக FASTag வாடிக்கையாளர் போர்ட்டலைப் பயன்படுத்தலாம்.

• அதிகாரப்பூர்வ NPCI போர்ட்டலில் (https://www.npci.org.in/what-we-do/netc-fastag/check-your-netc-fastag-status) உள்நுழையவும்.

• பேலன்ஸ் முறையாக உள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும்.

• உங்கள் கணக்கிற்கு தேவையான குறைந்தபட்ச தொகையை ரீசார்ஜ் செய்யவும்.

• கே.ஒய்.சி முறையாக இருக்கிறதா .. பிளாக் லிஸ்ட் நோட்டிபிகேஷன் வந்துள்ளதா என்பதை பார்க்கவும்.

• இதை எல்லாம்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே செய்ய வேண்டும்.

டோல் கேட்

மாற்றங்கள்: தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அறிவிப்பு 1: பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.

அறிவிப்பு 2 : பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.

அறிவிப்பு 3 - பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+