டோல் கேட்.. நாடு முழுக்க பாஸ்ட் டாக்கில் வருகிறது மாற்றம்.. வாகன ஓட்டிகள் உடனே நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய வகையான FASTag மே 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இதை உறுதி செய்துள்ளார். அதாவது மக்கள் FASTag பயன்படுத்தும் முறை இதன் மூலம் மாற உள்ளது.

FASTag பயன்பாடு மற்றும் அதில் கட்டணம் வசூலிக்கும் முறை என்று எல்லாம் மொத்தமாக மாற உள்ளது.

automobile transport

டோல் கட்டணம்

இது போக விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்

பாஸ்ட் டாக் விதிகள் மாற்றம்

சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ஃபாஸ்டாக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. அதாவது இ மேன்டேட் எனப்படும் கட்டமைப்பில் இணைத்து உள்ளது. இது கிரெடிட் கார்டு ஆட்டோபேமெண்ட் போல. அதாவது உங்கள் பாஸ்ட் டாக் கார்டில் பணம் தீர்ந்தவுடன்.. அது மினிமம் பேலன்சுக்கு கீழே வந்தவுடன்.. தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இதில் சேர்க்கப்படும்.

அதாவது நெட்ப்ளிக்ஸ் போன்ற பக்கங்களில் எப்படி தானாக ரீசார்ஜ் ஆகிறதோ அப்படி. இதற்கு நீங்கள் இ-மேண்டேட் அனுமதி மட்டும் கொடுக்க வேண்டும். அதை கொடுத்தால் போதும் இனி ஒவ்வொரு முறையும் உங்கள் Fastag-ஐ ரீசார்ஜ் செய்ய வேண்டாம். Fastagக்கிற்கு இ-மேண்டேட் தருவது தற்போது கட்டாயம் ஆகி உள்ளது.

உங்கள் பாஸ்ட்டாக்கில் உள்ள தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைந்தவுடன் இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்து அதில் சேர்க்கும்.இதனால் பயனர் மீண்டும் மீண்டும் Fastag ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. மொத்தத்தில், வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டாக் ரீசார்ஜ் செய்யும் தொல்லை இனி இல்லை.

தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அறிவிப்பு 1: பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும்.

அறிவிப்பு 2 : பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும்.

அறிவிப்பு 3 - பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.

டோல் கேட் புகார்கள்

FASTag முறையின் மூலம் பலருக்கும் அதிக அளவிலான அல்லது எதிர்பார்க்காத அளவிலான சுங்க வரி வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் டோல் கேட் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டோல் கேட்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நிதின் கட்கரி, டோல் கேட் தொடர்ந்து செயல்படும். அதன் கட்டணம்தான் சாலைகள் கட்ட, சாலைகள் பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. அந்த சாலைகளை தொடர்ந்து பயன்படுத்து டோல் அவசியம். அதனால் டோல்கள் நீக்கப்பட்டது. டோல் தொடர்ந்து செயல்படும், என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்கு இடையே டோல்கள் மீது கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. அதாவது வழக்கமான கட்டணத்தை விட பல இடங்களில் 100-200 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

உதாரணமாக ஒரு டோல் கேட்டை கடக்க கட்டணம் 450 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அந்த டோல் கேட்டை கடந்த பின் அந்த கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பதிலாக ரூ.650 வசூலிக்கப்படுவதாக கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. ஒருவர் இருவர் என்று இல்லாமல் இப்போது நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக புகார் வைக்க தொடங்கி உள்ளனர்.தங்களுக்கும் இதேபோல் சுங்கவரி கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நெட்டிசன்கள் புகார் வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+