வியப்பா இருக்கே.. பெங்களூர் - சென்னை சாலையில் சட்டென நடந்த மாற்றம்.. இனி இரவு பயணம் ரொம்ப ஈசி
சென்னை: சென்னை பெங்களூர் நெடுஞ்சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகம் விபத்து நடக்கும் 3 இடங்களில் இரவு நேர வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை விதிகளை காண்பிக்கும் தானியங்கி விபத்து தடுப்பு ஒளிரும் மின்விளக்குகள் (PROJECTOR) அமைக்கப்பட்டுள்ளன.

இரவில் பயணம் செய்பவர்களுக்கு கண்கள் கூசாத வகையில், அதே சமயம் எளிதில் பார்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலைக்கு இடையே தற்போது பயன்பாட்டில் உள்ள சாலையில் முழுக்க முழுக்க சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
முன்பு இந்த சாலையில் மின்சார விளக்குகள் இருந்தன. சில இடங்களில் விளக்குகள் இல்லாமல் இருந்தன. இந்தநிலையில்தான் தற்போது இந்த சாலை முழுக்க சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய முடிகின்றது.
இதற்கு இடையே.. சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயண நேரம்: முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த சாலையில் சூப்பர் வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் தினமும் சுமார் 1.15 லட்சம் கார் பயணம் செய்கிறது. இது பீக் ஹவர்ஸில் சுமார் 1 லட்சம் வாகனங்கள் இங்கே பயணம் செய்கின்றன. இந்த பாலம் கட்டுமானம் முடிந்ததும் சுமார் 80 சதவிகித வாகனங்கள் இந்த பாதையில் கீழே செல்வதற்கு பதிலாக மேலே உள்ள பாலத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை வளர்ச்சி; சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலை தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த சாலை எவ்வளவு தூரம் கட்டப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் 71 கிமீ பிரிவு - 87% நிறைவு
ஆந்திரப் பிரதேசத்தில் 85 கிமீ பிரிவு - 40% நிறைவு
தமிழ்நாட்டில் 106 கி.மீ பிரிவு - 55% நிறைவு
இந்த ஆண்டு இறுதிக்குள் 258 கிமீ 6 வழி எக்ஸ்பிரஸ் முழுவதையும் முடிக்க NHAI திட்டமிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வரும் ராட்சச புதிய மேம்பாலங்கள்.. கண்ணசைத்த டெல்லி.. கொட்டப்படும் பல கோடி ரூபாய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications