இவி மார்க்கெட்டில் குதிக்கும் புல்லட்! வருகிறது ராயல் என்பீல்ட் இவி பைக்! எப்போது ரிலீஸ்? என்ன விலை?
சென்னை: இந்தியாவின் டாப் பைக்காக பார்க்கப்படும் ராயல் என்பீல்ட் பைக் மார்க்கெட்டை உலகின் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் குறி வைக்க தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் ராயல் என்ஃபீல்டு தனது முதல் EV பைக்கை 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவில் ராயல் என்பீல்ட்.. சரியாக சொல்ல வேண்டும் புல்லட் பைக் என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிள். முன்பு கிராமங்களில் குறிப்பிட்ட சாதியினர், நகரங்களில் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பைக்காக இது இருந்தது.

ஆனால் அதன்பின் கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் ராயல் என்பீல்ட் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ராயல் என்பீல்ட் வாங்குவது என்பது ஸ்டேட்டஸ் சிம்பிள் என்பது மாறி வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது போல எல்லோரும் எளிதாக வாங்க தொடங்கிவிட்டனர்.
முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்ட் மிக முக்கியமான பைக்காக பார்க்கப்படுகிறது. அதிலும் லடாக் பயணம் செல்வது, வடஇந்திய பயணம் மேற்கொள்வது என்று பல்வேறு விஷயங்களுக்கு ராயல் என்பீல்ட் மிக முக்கியமான பைக்காக மாறிவிட்டது. இதனால் இந்தியாவில் ராயல் என்பீல்ட் மார்க்கெட் என்பது மிகப்பெரியது.
ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட சராசரியாக 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை ராயல் என்பீல்ட் பைக் விற்பனை ஆகிறது. ஒரு ஹை எண்டு மாடல் பைக் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆவது ராயல் என்பீல்ட் பைக்கிற்கு மட்டுமே. இந்த மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்றுதான் உலகின் டாப் பைக் நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. முக்கியமாக ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ப் இரண்டு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து உள்ளன.
இவி - ராயல் என்பீல்ட்: ராயல் என்ஃபீல்டு தனது முதல் EV பைக்கை 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது. அதே நேரத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் செய்யாரில் வரவிருக்கும் ஆலை 2025 ஆம் ஆண்டிற்குள் தயாராக இருக்கும் என்றும் அறிவித்து உள்ளது.
இந்த இவி பைக் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆன் ரோட்டில் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.
அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது.

சார்ஜிங் பாயிண்ட் பயன்பாடு: இந்த நிலையில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாய்ண்ட் இயங்கும். வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இலவச பர்மீட்: இந்த நிலையில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் அனைத்திற்கும் இலவச பர்மீட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பேட்டரி மூலம் இயக்கப்படும் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும், மெத்தனால் அல்லது எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் பயணிகள் வாகனங்களுக்கும், போக்குவரத்து துறையின் பர்மீட் கட்டணமின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வரும் மின்சார சுற்றுலா வாகனங்களுக்கும் இது பொருந்மதும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் ராயல் என்ஃபீல்டு தனது முதல் EV பைக்கை 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications
