தூத்துக்குடி, சென்னை, ஓசூர்! 3ல் ஒன்றை டிக் அடிக்க போகும் எலான் மஸ்க்! தமிழ்நாட்டிற்கு வரும் டெஸ்லா?
சென்னை: தமிழ்நாட்டில் டெஸ்லா நிறுவனம் முதலீடு செய்ய போவதாக இரண்டு நாட்களாக செய்திகள் வருகின்றன. இப்போது இதில் புதிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
அதன்படி ஓசூர், தூத்துக்குடி, சென்னை மூன்றில் ஒரு இடத்தை டெஸ்லா நிறுவனம் தேர்வு செய்யலாம் என்கிறார்கள். இதில் ஓசூர் கடைசி ஆப்ஷன்தான். ஆனால் தூத்துக்குடி - சென்னை முதல் ஆப்ஷன் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் சென்னை டிக் அடிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.

கட்டமைப்பு
தமிழ்நாட்டில் இருக்கும் வலுவான EV கட்டமைப்பு மற்றும் வலுவான கார் உற்பத்தி சுற்றுசூழல் காரணமாக டெஸ்லாவின் மையத்திற்கான முதல் தேர்வாக தமிழ்நாடு மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், சென்னை அல்லது தமிழ்நாட்டின் வேறு பகுதியில் இவி உற்பத்தி மையம் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி டெஸ்லா நிறுவனம் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் நிலம் தேடுகிறது. இந்தியாவின் 40% EVகளை தமிழ்நாடு உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் திறமையான தொழிலாளர்கள், துறைமுக அணுகல் மற்றும் சென்னையில் உள்ள ஆட்டோ ஹப் ஆகியவை இதற்கு சாதகமாக உள்ளது.
சமீபத்தில்தான் வியட்நாம் EV தயாரிப்பு நிறுவனமான VinFast தூத்துக்குடியில் $2 பில்லியன் முதலீடு செய்தது.
தமிழ்நாடு முதலீடு: இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. தமிழ்நாடு அரசு இ வாகனங்களுக்கான கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டு அதற்கான சலுகைகளையும் உடனுக்குடன் அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் வழியாக டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழிற்துறை அதிகாரிகள் தீவிரமான ஆலோசனைகளை செய்து வருவதாகவும் தொழிற்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா கார், பேட்டரி மூலம் இயங்க கூடிய கார்களில் உலகில் முதன்மையான காராக இருக்கிறது. அதேபோல் இதன் நிறுவனர் எலான் மஸ்க் உலகில் முக்கியமான தொழில் அதிபராக இருக்கிறார். இவர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர மாநிலங்கள்: கடலோர மாநிலங்களை இதற்காக டெஸ்லா கவனித்து வருகிறதாம். பல்வேறு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக டெஸ்லாவின் கிகா தொழிற்சாலையை இந்தியாவின் எதாவது ஒரு கடலோர சிட்டியில் அமைக்க டெஸ்லா ஆலோசனை செய்து வருகிறது. இப்போதைக்கு சென்னை, குஜராத், தெலுங்கானா ஆகியவை டெஸ்லாவின் லிஸ்டில் உள்ள பகுதிகள் ஆகும். இவற்றில் ஒன்றை டெஸ்லா டிக் செய்ய வாய்ப்புகள் உள்ளதாம்.
டெஸ்லா முதலீடு
இந்தியாவில் பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் நேரடியாக உற்பத்தியை மேற்கொள்ள டெஸ்லா நினைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை கடுமையாக கண்டித்து உள்ளார்.
இந்தியாவில் அவர் முதலீடு செய்ய விரும்ப காரணம் வரி மட்டுமே. அதிக வரி காரணமாக நேரடியாக இந்தியாவில் பேக்ட்ரி கட்ட விரும்புகிறார். இந்தியா அதிகம் வரி போடுகிறது. முக்கியமாக வெளிநாட்டு கார்களுக்கு அதிக இறக்குமதி வரி போடுகிறது. இதற்காக நேரடியாக அங்கே டெஸ்லா உற்பத்தி மையத்தை உருவாக்க மஸ்க் நினைக்கிறார். அது பெரிய தவறு. அமெரிக்காவிற்குத்தான் சிக்கல், என்று டிரம்ப் பாய்ந்து உள்ளார். டெஸ்லா உற்பத்தி மையம் மகாராஷ்டிரா அல்லது தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று இருந்தார் . இந்த பயணத்தில் அவர் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை சந்தித்து இருந்தார். இந்த நிலையில்தான் டெஸ்லா முதலீடு இந்தியாவிற்குள் வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. இந்தியா மற்றும் பல்வேறு தெற்காசிய நாடுகளில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதற்காக ஆசியாவில் உற்பத்தி செய்ய அவர் திட்டமிட்டு வருகிறார். சீனாவின் உற்பத்தியை மேலும் பெருக்க அவர் விரும்பாத நிலையில் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. அதன்படி 2 மில்லியன் டாலருக்கு வாகனம், செமி கன்டெக்ட்டர் என்று பல்வேறு உற்பத்திகளை டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செய்ய உள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications