சென்னை மைசூர் இடையே வருகிறது.. புல்லட் ரயில்! சத்தமின்றி நடக்கும் "சம்பவம்"! மிகப்பெரிய திட்டம் ரெடி
சென்னை: சென்னை - மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை (MAHSR), அல்லது மும்பை-அகமதாபாத் HSR, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையையும், குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தையும் இணைக்கும் அதிவேக ரயில் பாதையாகும். இது இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பாதையாக இருக்கும்.

தொடக்கத்தில் இதற்கான கட்டுமானம் ஏப்ரல் 2020 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, மற்றும் திட்டம் டிசம்பர் 2023 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், முழு நடைபாதையும் முடிவடையும் தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் குஜராத் வழியாக 352 கிமீ பகுதியில் 50 கிமீ (31 மைல்) பகுதியைத் முதல்கட்டமாக 2026ல் திறக்க உள்ளனர். இந்த திட்டம் 2027 இல் முழுமையாக திறக்கப்படும், சூரத்திலிருந்து பிலிமோரா வரை, ஆகஸ்ட் மாதம் 2026ல் முதல் கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இரண்டாவது திட்டம்: இந்த நிலையில்தான் சென்னை - மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை - மைசூர் அதிவேக ரயில் (CBM புல்லட் ரயில்) திட்டம் 435 கிமீ தூரம் செல்லும் உத்தேச அதிவேக ரயில் பாதை. இது சென்னை, பெங்களூர் (பெங்களூரு) மற்றும் மைசூர் (மைசூரு) ஆகிய நகரங்களை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 9 நிலையங்கள் வழியாக இணைக்கும்.
இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் இந்த வருடம் தொடங்க உள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு மார்க்கம் வழியாக இந்த ரயில் பயணிக்கும். இந்த திட்டத்தின் முக்கிய புள்ளிவிவரங்கள் முன்மொழியப்பட்டது: 435 கி.மீ
அதிகபட்ச வேகம்: 350 கி.மீ
செயல்பாட்டு வேகம்: மணிக்கு 320 கி.மீ
சராசரி வேகம்: 250 kmph
ட்ராக் கேஜ்: ஸ்டாண்டர்ட் கேஜ் - 1435 மிமீ
சிக்னலிங்: DS-ATC
ரயில் திறன்: 750 பயணிகள்
இழுவை: 25 KV AC மேல்நிலை கேடனரி (OHE)
பாதுகாப்பு: பூகம்பம் ஏற்பட்டால் தானாக நிறுத்துவதற்கும், நிலநடுக்கம் கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு (யுரேடாஸ்) ஆகியவை கொண்டது.
சென்னை - மைசூர் ஹெச்எஸ்ஆர் பாதை
நீளம்: 435 கி.மீ
நிலையங்களின் எண்ணிக்கை: 9
நிலையத்தின் பெயர்கள்: சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு ஆகியவை ஆகும்.
எக்ஸ்பிரஸ் வே: சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த சாலையில் சூப்பர் வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications