சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருவமழை பெய்தால் போதும், சென்னையின் சாலைகள் சல்லடைக் கண்களாக மாறிவிடுவது வாடிக்கை. "எத்தனை முறைதான் பேட்ச் ஒர்க் செய்வீர்கள்?" எனப் புலம்பும் வாகன ஓட்டிகளுக்கு விடை சொல்லும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு அதிரடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 நவீன 'இன்ஃப்ராரெட்' (Infrared) சாலை பழுதுபார்க்கும் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது சாதாரண ஒட்டுவேலை அல்ல, அறிவியல்பூர்வமான நிரந்தரத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

automobile chennai

எப்படி செயல்படுகிறது இந்தத் தொழில்நுட்பம்?

தற்போது நடைமுறையில் உள்ள முறையில், குண்டு குழிகளில் தாரைக் கொட்டி சமன் செய்வார்கள். ஆனால், சில நாட்களிலேயே அந்தப் பகுதி மேடு பள்ளமாக மாறி, மீண்டும் பழையபடி குழி விழுந்துவிடும். குறிப்பாக மழைக்காலங்களில் இந்தத் தற்காலிகத் தீர்வுகள் கைகொடுப்பதில்லை.

ஆனால், இந்தப் புதிய 'இன்ஃப்ராரெட்' தொழில்நுட்பம் முற்றிலும் மாறுபட்டது:

சூடுபடுத்தும் முறை: முதலில் சேதமடைந்த சாலைப் பகுதியை இன்ஃப்ராரெட் கதிர்கள் மூலம் சூடுபடுத்துவார்கள்.

கலவை: வெப்பத்தால் இளகிய அந்தப் பகுதியில் புதிய பிற்றுமின் (Bitumen) கலவை சேர்க்கப்படும்.

சமன்படுத்துதல்: பழைய சாலையும் புதிய கலவையும் ஒன்றாக இணைந்து உருகுவதால், ஒட்டுப்போட்ட இடமே தெரியாத அளவுக்கு சாலை சமதளமாக மாறும்.

இந்த முறையில் பழுதுபார்க்கப்படும் சாலைகள் நீண்ட காலத்திற்கு உழைக்கும். சாலைக்கும் ஒட்டுப்போட்ட இடத்திற்கும் இடையே இடைவெளி இருக்காது என்பதால், வாகன ஓட்டிகளுக்கு அதிர்வுகள் இல்லாத பயணம் அமையும்.

எப்படி செய்யப்படும்?

இந்த இன்ஃப்ராரெட் (Infrared) தொழில்நுட்பம் ஒரு 'ஹீலிங்' (Healing) சிகிச்சை போலச் செயல்படுகிறது. வழக்கமாகச் சாலைகளில் குழி விழுந்தால், அதன் மேல் மட்டும் ஜல்லியும் தாரும் கொட்டப்படும். ஆனால், இந்த முறையில் இன்ஃப்ராரெட் கதிர்கள் மூலம் சேதமடைந்த சாலையின் குறிப்பிட்ட பகுதியைத் தீவிரமாகச் சூடுபடுத்துவார்கள்.

இதனால் பழைய தார் (Bitumen) இளகி மென்மையாகும். அந்தச் சமயத்தில் புதிய தார் கலவையைச் சேர்த்துச் சமன் செய்யும் போது, பழைய சாலையும் புதிய கலவையும் ஒன்றாக உருகிப் பிணைந்துவிடும் (Thermal Bonding). இதனால் ஒட்டுப்போட்ட இடம் தனியாகத் தெரியாமல், சாலை ஒரே சீராக மாறுவதுடன், மழைநீர் உள்ளே புகாத அளவுக்கு இடைவெளியற்ற உறுதியான பிணைப்பை உருவாக்குகிறது. இது சாலை மீண்டும் அந்த இடத்தில் உடையாமல் நீண்ட காலம் உழைக்க உதவுகிறது.

மூன்று ஆண்டு பராமரிப்பு

பஸ் செல்லும் முக்கிய சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் என அனைத்திலும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வெறும் இயந்திரங்களை வாங்குவதோடு நிற்காமல், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதனை இயக்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்பு ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பும் பராமரிப்பும் உறுதி செய்யப்படும்.

குடியிருப்போர் நலச் சங்கங்கள் சொல்வது என்ன?

மாநகராட்சியின் இந்த முயற்சியை வரவேற்கும் அதே வேளையில், தரம் குறித்த கவலையையும் முன்வைக்கின்றனர் பொதுமக்கள். சாலைகளை அமைக்கும்போதே தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, முறையான கண்காணிப்புடன் அமைத்தால் இதுபோன்ற பேட்ச் ஒர்க்குகளுக்கே வேலை இருக்காது. தற்போது இருக்கும் ஒட்டுவேலைகள் சாலையை மேலும் மோசமாக்குகின்றன. குறைந்தபட்சம் இந்தத் தொழில்நுட்பமாவது சாலைகளைச் சமமாக மாற்றட்டும் என்கிறார்கள்.

காலங்காலமாகத் தற்காலிகத் தீர்வையே பார்த்து வந்த சென்னை மக்களுக்கு, இந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் ஒரு நிம்மதிப் பெருமூச்சைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+