பல லட்சம் பேர் பயணிக்கும்.. சென்னையின் மிக முக்கிய சாலை.. நடுவே வரும் L வடிவ ராட்சச பாலம்!
சென்னை: சென்னை மாநகரின் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றான அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில், மாநில நெடுஞ்சாலைத் துறை ₹60.68 கோடி செலவில் அமைக்கும் 'L' வடிவ மேம்பாலப் பணிகள் நிறைவடைந்த பிறகு, போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
652 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலத்தின் 19 தூண்களில் 17 தூண்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மேலும் ஒரு தூண் விரைவில் அமைக்கப்பட உள்ளது. OMR பக்கத்தில் உள்ள 120 மீட்டர் நீள அணுகுசாலை முடிவடைந்துள்ள நிலையில், சர்தார் படேல் சாலைப் பகுதியில் 80 மீட்டர் நீள அணுகுசாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடையார் பால பணிகள்
நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளபடி, "சந்திப்புக்கு மேலே உள்ள முக்கியமான மற்றும் 35 மீட்டர் நீளமுள்ள இறுதித் தூண் கட்டுமானத்திற்கு காவல்துறை அனுமதிக்குக் காத்திருக்கிறோம். நான்கு வழித்தடங்களில் வரும் வாகனங்களை இரண்டு வழித்தடங்களாகத் திருப்ப வேண்டும். MRTS நிலையத்திலிருந்து கூடுதல் இடம் பெற முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறோம். வானிலை ஒத்துழைத்தால், டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க நம்புகிறோம்" என்று தெரிவித்தன.
மீதமுள்ள இரண்டு தூண்கள் அமைக்கப்படவிருக்கும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மேம்பாலத்தில் மின்விளக்கு பொருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ராஜீவ் காந்தி சாலை
சர்தார் படேல் சாலையை தகவல் தொழில்நுட்ப வழித்தடத்திற்கான நுழைவாயிலான ராஜீவ் காந்தி சாலையுடன் இந்த சந்திப்பு இணைத்தாலும், சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது ஒரு சிரமமான அனுபவமாகவே உள்ளது. ஆய்வுப் படி, ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,459 பயணிகள் கார்களும், குருநானக் கல்லூரி சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,742 பயணிகள் கார்களும் பயணம் செய்கின்றன. கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் இங்கே பயணம் செய்கிறார்கள்.
காலை மற்றும் மாலை நேர உச்சக்கட்ட போக்குவரத்தில் மத்திய கைலாஷ் சந்திப்பைக் கடந்து தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தை அடைவதற்கும், திருவான்மியூர் சந்திப்பைக் கடப்பதற்கும் குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும். நகர போக்குவரத்து காவல் துறையினர் மத்திய கைலாஷ் மேம்பாலத்தில் போக்குவரத்து ஏற்பாடுகளை இன்னும் இறுதி செய்யவில்லை என்றாலும், இது வாகன ஓட்டிகளுக்கு நிச்சயம் நிவாரணம் அளிக்கும்.
மத்திய கைலாஷ் மேம்பாலம்
மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்திரா நகர் மற்றும் திருவான்மியூர் ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள இரண்டு 'U' வடிவ மேம்பாலங்கள் காரணமாக, போக்குவரத்து நெரிசல் திருவான்மியூர் சந்திப்புக்கு மாற வாய்ப்புள்ளது. வாகனங்கள் சுதந்திரமாக சந்திப்பு வரை செல்லக்கூடிய நிலையில் இது ஒரு சவாலாக இருக்கும் என்று அவர் கூறினார்.
"இந்தச் சவாலை சமாளிக்க, திருவான்மியூர் சந்திப்பை விரிவுபடுத்துவதற்கும், போக்குவரத்தை சீரமைப்பதற்காக பெருநகர போக்குவரத்துக் கழக (MTC) பேருந்து நிறுத்தத்தை சற்று தூரம் மாற்றுவதற்கும் சென்னை மெட்ரோவிடம் இருந்து கூடுதல் இடம் கோரப்பட்டுள்ளது. சர்தார் படேல் சாலையில் உள்ள மேம்பாலத்தைப் போலவே, புதிய மேம்பாலத்தையும் காலை மற்றும் மாலை நேர உச்சக்கட்ட போக்குவரத்தைப் பொறுத்து ஒருவழி அல்லது இருவழிப் போக்குவரத்து என நெகிழ்வாகப் பயன்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications