கவனமாக போங்க! சென்னை சாலையில்.. புதிதாக முளைத்த குறியீடுகள்.. அது என்ன வட்டமாக மஞ்சள் நிறத்தில்
சென்னை: சென்னை சாலைகளில் புதிய விதமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. விபத்து ஏற்படும் பகுதிகளை முன்னிலைப்படுத்த சென்னை போக்குவரத்துக் காவல்துறை புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் விபத்துக்களை குறைக்க ஏற்கனவே zero is good என்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. விபத்துகளை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே அனைத்து நகர சாலைகளும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின்படி பல விபத்துக்களைக் கண்ட பகுதிகளை தனித்து காட்டும் வகையில் புதிய குறியீடுகளை செய்ய உள்ளனர். பிரகாசமான மஞ்சள் வட்டங்களுடன் அது தொடர்புடைய சட்டக் குறியீட்டுடன், விபத்தின் விளக்கப்படங்களுடன் குறிக்கும் வகையில் குறியீடுகளை அமைக்க உள்ளனர். குறைந்த வெளிச்சத்தில் கூட இந்த அடையாளங்கள் தெரியும் வகையில் இந்த அடையாளங்களை அமைக்க உள்ளனர்.
புதிய விதிகள்: சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது.
எப்படி நடக்கும்?: பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சென்னையில் இதில் கூடுதல் ஒரு வழிமுறையும் சேர்க்கப்பட்டு உள்ளது. சென்னையில் போலீஸ் மட்டுமின்றி மக்களும் போட்டோ எடுக்க முடியும். மக்களும் போட்டோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய முடியும். அதில் இருக்கும் நம்பரை பார்த்து.. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் சென்றால்.. அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும். இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக போலீசார் பின்பற்றி வருகின்றனர்.
போக்குவரத்து விதிகள்; இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய பல்லாயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பல்வேறு விதிகளான வேகமாக ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற காரணங்கள் காரணமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி சென்னையில் விதிகளை மீறிய 12600 பேரின் லைசன்ஸ் முடக்கப்பட்டு உள்ளது. இதில் 50 சதவிகிதம் பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேமரா வந்துவிட்டது: இது போக சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதன் மூலம் நேரடியாக விதி மீறல் செய்பவர்களை போலீசார் எளிதாக படம் பிடிக்க முடியும். முதல் கட்டமாக 20 சிக்னல்கள் இந்த கேமராக்களை கொண்டு உள்ளன. இது வரும் நாட்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications