சென்னையில் களமிறக்கப்பட்ட 3 கால் ராட்சன்.. சிக்னலுக்கு சிக்னல் வந்த சோதனை.. வாகன ஓட்டிகளுக்கு செக்
சென்னை; சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது.

எப்படி நடக்கும்?: பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சென்னையில் இதில் கூடுதல் ஒரு வழிமுறையும் சேர்க்கப்பட்டு உள்ளது. சென்னையில் போலீஸ் மட்டுமின்றி மக்களும் போட்டோ எடுக்க முடியும். மக்களும் போட்டோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய முடியும். அதில் இருக்கும் நம்பரை பார்த்து.. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் சென்றால்.. அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும். இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக போலீசார் பின்பற்றி வருகின்றனர்.
போக்குவரத்து விதிகள்; இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய பல்லாயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பல்வேறு விதிகளான வேகமாக ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற காரணங்கள் காரணமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி சென்னையில் விதிகளை மீறிய 12600 பேரின் லைசன்ஸ் முடக்கப்பட்டு உள்ளது. இதில் 50 சதவிகிதம் பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உளது என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேமரா வந்துவிட்டது: இது போக சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதன் மூலம் நேரடியாக விதி மீறல் செய்பவர்களை போலீசார் எளிதாக படம் பிடிக்க முடியும். முதல் கட்டமாக 20 சிக்னல்கள் இந்த கேமராக்களை கொண்டு உள்ளன. இது வரும் நாட்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
80 Tripod cameras in junctions across the city.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 18, 2023
🎦
Watch the traffic situation at all important crossroads with live and efficient monitoring.
🎦
Technology help us to serve you better!
🎦#YourSafetyOurPriority#Chennai #Traffic #Police @R_Sudhakar_Ips pic.twitter.com/lHKzrwar5p
தீவிரமாகும் விதிகள்: தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications