5 நிமிட சார்ஜில் 220 கிமீ.. சல்லுனு பறக்கலாம்.. வருகிறது MI கார்.. ஆட்டோமொபைல் துறையே மாறப்போகுது
சென்னை: உலகம் முழுக்க மின்சார வாகனங்கள் கவனம் பெற்று வரும் நிலையில் பிரபல செல்போன் நிறுவனமான எம்ஐ நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது.
XIAOMI நிறுவனம் புதிதாக இரண்டு கார்களை அறிமுகம் செய்து இருக்கிறது. XIAOMI SU7, XIAOMI SU7 MAX என இரண்டு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்திருக்கிறது. மின்சார கார்கள் துறைக்குள் இந்த நிறுவனம் நுழைந்துள்ளது.

இந்த புதிய கார்கள் மிக வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இந்தக் காரிலிருக்கும் ஹைப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம் கார்கள் வேகமாக இயங்கும். 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 220கிமீ வரை பயணிக்க முடியும் என அறிவித்திருக்கிறது MI. அதன்படி கார்கள் மிக வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
அதோடு இந்த சார்ஜ் நீண்ட நேரம் நிற்க கூடியது. அதே போல் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 510 கிமீ தூரம் பயணிக்க முடியும். இந்த கார் எளிதில் சார்ஜ் குறையாது. மக்கள் இடையே தற்போது இந்த கார் கவனம் பெற்றுள்ளது.
பற்றி எரியும் மின்சார வாகனங்கள்: சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இ பைக் எனப்படும் எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை, மகள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகனப்ரீத்தி ஆகியோர் பலியானார்கள்.
இரவில் சார்ஜ் போடும் போது பைக் பேட்டரி வெடித்து புகை ஏற்பட்டுள்ளது. இந்த புகையில் மூச்சு முட்டி இருவரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
புனே சம்பவம்: இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் புனேவில் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ பைக் திடீரென தீ பிடித்தது. சாலையில் நின்று கொண்டு இருந்த பைக் திடீரென தீ பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பைக்கில் அப்போது யாரும் இல்லை. பார்க் செய்யப்பட்டு இருந்த பைக் திடீரென வெயிலில் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
இதற்கு ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், புனேவில் நடந்த விபத்து குறித்து நாங்கள் அறிந்தோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விபத்துக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்று விசாரித்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம். தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் நன்றாக இருக்கிறார். பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், இதை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் கார் தீ விபத்து; இந்த நிலையில்தான் சென்னையில் பிரபல இவி நிறுவன கார் ஒன்று தீ பிடித்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. MG நிறுவனத்தின் ZS EV கார் தீ பிடித்து சாம்பலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரணமாக நிறுத்தப்பட்ட கார் தீ பிடித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் சரவணகுமார் என்பவர் செய்துள்ள போஸ்டில், ஆறு வாரங்களுக்கு முன்பு நான் 26.61 லட்சத்திற்கு வாங்கிய எனது MG ZS EV கார், நிறுத்தப்பட்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்தது. நான் காரை ஓட்ட கூடவில்லை, வெறுமனே நிறுத்தப்பட்டு இருந்த போது தீ பிடித்தது. இந்த சமபவம் என் குடும்பம் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications