திடீர் திடீர்ன்னு உடையுதாம், சாயுதாம்.. ஃபாஸ்டாக் வைத்திருப்பவர்களுக்கு.. டோல் கேட்டில் அதிர்ச்சி
சென்னை: FASTag முறையின் மூலம் பலருக்கும் அதிக அளவிலான அல்லது எதிர்பார்க்காத அளவிலான சுங்க வரி வசூலிக்கப்படுவதாக் புகார்கள் எழுந்துள்ளது. அதாவது வழக்கமான கட்டணத்தை விட பல இடங்களில் 100-200 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
உதாரணமாக ஒரு டோல் கேட்டை கடக்க கட்டணம் 450 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அந்த டோல் கேட்டை கடந்த பின் அந்த கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பதிலாக ரூ. 650 வசூலிக்கப்படுவதாக கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. ஒருவர் இருவர் என்று இல்லாமல் இப்போது நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக புகார் வைக்க தொடங்கி உள்ளனர். தங்களுக்கும் இதேபோல் சுங்கவரி கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நெட்டிசன்கள் புகார் வைத்துள்ளனர். சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி ஃபாஸ்டாக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. அதாவது இ மேன்டேட் எனப்படும் கட்டமைப்பில் இணைத்து உள்ளது. இது கிரெடிட் கார்டு ஆட்டோபேமெண்ட் போல. அதாவது உங்கள் பாஸ்ட் டாக் கார்டில் பணம் தீர்ந்தவுடன்.. அது மினிமம் பேலன்சுக்கு கீழே வந்தவுடன்.. தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இதில் சேர்க்கப்படும்.
அதாவது நெட்ப்ளிக்ஸ் போன்ற பக்கங்களில் எப்படி தானாக ரீ சார்ஜ் ஆகிறதோ அப்படி. இதற்கு நீங்கள் இ-மேண்டேட் அனுமதி மட்டும் கொடுக்க வேண்டும். அதை கொடுத்தால் போதும் இனி ஒவ்வொரு முறையும் உங்கள் Fastag யை ரீ சார்ஜ் செய்ய வேண்டாம். Fastagக்கிற்கு இ-மேண்டேட் தருவது தற்போது கட்டாயம் ஆகி உள்ளது.
உங்கள் பாஸ்ட்டாக்கில் உள்ள தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைந்தவுடன் இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்து அதில் சேர்க்கும். இதனால் பயனர் மீண்டும் மீண்டும் Fastag ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. மொத்தத்தில், வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டாக் ரீசார்ஜ் செய்யும் தொல்லை இனி இல்லை.
தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அறிவிப்பு 1: பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும்.
அறிவிப்பு 2 : பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். .
அறிவிப்பு 3 : பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.
டோல்: இது போக விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications