பைக் குறித்து உங்களுக்கே தெரியாத 8 சுவாரசியமான விஷயங்கள்.. இதை படிச்சா.. அசந்து போயிடுவீங்க!
சென்னை: பைக் குறித்த உங்களுக்கே தெரியாத.. அதே சமயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 சுவாரசியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. பைக் என்பது தற்போதைய சமூகத்தில் மிக முக்கியமான வாகனம் ஆகிவிட்ட நிலையில்.. அதை குறித்து அசத்தல் தகவல்கள் இங்கே வழங்கப்பட்டு உள்ளன.
பைக்குகள் என்பவை எதோ 20ம் நூற்றாண்டில் உருவானது அல்ல. 1800களில் இருந்தே மோட்டார் சைக்கிள்கள் உள்ளன! எட்வர்ட் பட்லர் 1884 ஆம் ஆண்டில் உலகின் முதல் மோட்டார் சைக்கிளை வடிவமைத்து உருவாக்கினார். இன்றுள்ள மோட்டார் சைக்கிள்களைப் போல இது சக்தி வாய்ந்ததாகவும் திறன் கொண்டதாகவும் இல்லை. அதேபோல் இவ்வளவு மைலேஜும் கொடுக்காது. ஆனால் நாம் அனைவரும் இப்போது பயன்படுத்தும் பைக்குகளுக்கு விதை இதுதான் போட்டது.

இப்போது வரும் நவீன ஸ்போர்ட் பைக் டயர்களில் இயற்கை ரப்பர் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? டயரின் வெளிப்புறம் செயற்கை ரப்பரால் ஆனது. இது நீடித்துழைப்பது மற்றும் நல்ல இழுவை திறன் கொண்டிருப்பது போன்ற கொள்கையை கொண்டது.
உலகின் மிக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளின் விலை $360,000! இது ஃபெலைன் மோட்டார் சைக்கிள்களால் உருவாக்கப்பட்ட ஃபெலைன் ஒன் பைக் ஆகும். அதை உருவாக்கப் டைட்டானியம், கார்பன் மற்றும் விண்வெளி அலுமினியம் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
இப்போதெல்லாம் பைக்கில் லடாக் செல்வது உலக டிரிப் செல்வது சாதாரண விஷயம். இதில் நாம் இடை இடையே நின்று நின்று செல்வது வழக்கம். அதே சமயம் இந்தியாவில் மிக நீண்ட தூரம் நிற்காமல் பைக் ஓட்டியவர் என்ற சாதனையை திபயன் சௌத்ரி என்பவர்தான் முதன் முதலில் படைத்தார். அக்டோபர் 7, 2014 அன்று இந்தியாவின் ஜபல்பூரில் 125.52 மைல்கள் (202 கிலோமீட்டர்) இவர் பைக்கில் பயணம் செய்து சாதனை படைத்தார். 24 மணிநேரத்தில் (தனிநபர்) நீண்ட தூரம், அதாவது 2116.5 மைல்கள் (3406.17 கிமீ) மோட்டார் சைக்கிள் ஓட்டிய சாதனையை அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கான்டினென்டல் டயர் ப்ரோவிங் மைதானத்தில் கார்ல் ரீஸ் படைத்தார். இவர் 26 பிப்ரவரி 2017 அன்று படைத்தார்.
மோட்டார் சைக்கிள்கள் அதிக மைலேஜ் கொடுக்க கூடியவை. கார்கள் அல்லது டிரக்குகளை விட அவை அதிக மைலேஜ் தரும். அந்த வகையில் வெருச்சி நைட்ரோ 50 என்ற பைக் ஒரு கேலன் பெட்ரோலில் 172 கிமீ செல்ல முடியும் அளவிற்கு மைலேஜ் தரக்கூடியது.

இப்போது ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மிக அதிக வேகத்தில் சென்றாலும். முதல் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மணிக்கு 40 கிமீ வேகத்தில்தான் சென்றது. இது ஒரு சிலிண்டர் எஞ்சினை மட்டுமே கொண்டிருந்தது, அதன் கார்பூரேட்டராக தக்காளி கேன் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹெல்மெட்டைப் பயன்படுத்துவதற்கு கர்னல் டி.ஈ. லாரன்ஸ் என்பவரின் மரணம்தான் முக்கிய காரணம். இரண்டு சிறுவர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக அவர் மோட்டார் சைக்கிளை வளைத்து கீழே விழுந்து விபத்தில் இறந்தார். அவரின் மரணத்திற்கு பின்பே ஹெல்மெட் அணியும் வழக்கம் வந்தது.












Click it and Unblock the Notifications