உங்க கிட்ட பைக் இருக்கா? டூ வீலர் சர்வீஸ் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைக் சர்வீஸ் குறித்த உங்களுக்கே தெரியாத.. அதே சமயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

பைக்குகள் என்பவை எதோ 20ம் நூற்றாண்டில் உருவானது அல்ல. 1800களில் இருந்தே மோட்டார் சைக்கிள்கள் உள்ளன! எட்வர்ட் பட்லர் 1884 ஆம் ஆண்டில் உலகின் முதல் மோட்டார் சைக்கிளை வடிவமைத்து உருவாக்கினார். இன்றுள்ள மோட்டார் சைக்கிள்களைப் போல இது சக்தி வாய்ந்ததாகவும் திறன் கொண்டதாகவும் இல்லை. அதேபோல் இவ்வளவு மைலேஜும் கொடுக்காது. ஆனால் நாம் அனைவரும் இப்போது பயன்படுத்தும் பைக்குகளுக்கு விதை இதுதான் போட்டது.

Do you know these facts about servicing bikes and motorcycles?

இப்படிப்பட்ட பைக்குகளை எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும் , எப்படி சர்வீஸ் செய்ய வேண்டும் என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பைக் சர்வீஸ் என்பது ஒவ்வொரு 2,000 கி.மீ.க்கும் செய்யப்பட வேண்டும்., முதல் இலவச சேவை 500 கி.மீ. தூரம் சென்ற பின் செய்யப்படும். இந்த சர்வீஸ் முடிவடைந்த பிறகு, உங்கள் பைக்கை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 2,000 கிமீக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வது நல்லது.

எப்போது சர்வீஸ் செய்தாலும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களை தேர்வு செய்வதே எப்போதும் சிறந்தது. அதிகபட்சம் 4 மாதங்களுக்கு மேல் சர்வீஸ் செய்யாமல் தொடர்ந்து பைக்கை ஓட்ட வேண்டாம். சர்வீஸ் செய்த பின் சில நாட்கள் மெதுவாகவே ஓட்டவும். எல்லா பாகங்களும் சரியாக இருக்கிறதா என்றும் செக் செய்து கொள்ளவும்.

உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்வதற்கு ஒப்படைப்பதற்கு முன், அதில் உள்ள பைக்கிற்கு தொடர்பு இல்லாத அத்தியாவசியப் பொருட்களை அகற்றிவிடுவது நல்லது. 6 மாதங்களுக்கு ஒரு முறை எஞ்சின் ஆயில் மாற்றவும். அதேபோல் பில்டர்களை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றவும்.

பைக் குறித்த சில சுவாரசிய தகவல்கள்: இப்போது வரும் நவீன ஸ்போர்ட் பைக் டயர்களில் இயற்கை ரப்பர் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? டயரின் வெளிப்புறம் செயற்கை ரப்பரால் ஆனது. இது நீடித்துழைப்பது மற்றும் நல்ல இழுவை திறன் கொண்டிருப்பது போன்ற கொள்கையை கொண்டது.

உலகின் மிக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளின் விலை $360,000! இது ஃபெலைன் மோட்டார் சைக்கிள்களால் உருவாக்கப்பட்ட ஃபெலைன் ஒன் பைக் ஆகும். அதை உருவாக்கப் டைட்டானியம், கார்பன் மற்றும் விண்வெளி அலுமினியம் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

இப்போதெல்லாம் பைக்கில் லடாக் செல்வது உலக டிரிப் செல்வது சாதாரண விஷயம். இதில் நாம் இடை இடையே நின்று நின்று செல்வது வழக்கம். அதே சமயம் இந்தியாவில் மிக நீண்ட தூரம் நிற்காமல் பைக் ஓட்டியவர் என்ற சாதனையை திபயன் சௌத்ரி என்பவர்தான் முதன் முதலில் படைத்தார். அக்டோபர் 7, 2014 அன்று இந்தியாவின் ஜபல்பூரில் 125.52 மைல்கள் (202 கிலோமீட்டர்) இவர் பைக்கில் பயணம் செய்து சாதனை படைத்தார். 24 மணிநேரத்தில் (தனிநபர்) நீண்ட தூரம், அதாவது 2116.5 மைல்கள் (3406.17 கிமீ) மோட்டார் சைக்கிள் ஓட்டிய சாதனையை அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கான்டினென்டல் டயர் ப்ரோவிங் மைதானத்தில் கார்ல் ரீஸ் படைத்தார். இவர் 26 பிப்ரவரி 2017 அன்று படைத்தார்.

மோட்டார் சைக்கிள்கள் அதிக மைலேஜ் கொடுக்க கூடியவை. கார்கள் அல்லது டிரக்குகளை விட அவை அதிக மைலேஜ் தரும். அந்த வகையில் வெருச்சி நைட்ரோ 50 என்ற பைக் ஒரு கேலன் பெட்ரோலில் 172 கிமீ செல்ல முடியும் அளவிற்கு மைலேஜ் தரக்கூடியது.

இப்போது ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மிக அதிக வேகத்தில் சென்றாலும். முதல் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மணிக்கு 40 கிமீ வேகத்தில்தான் சென்றது. இது ஒரு சிலிண்டர் எஞ்சினை மட்டுமே கொண்டிருந்தது, அதன் கார்பூரேட்டராக தக்காளி கேன் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹெல்மெட்டைப் பயன்படுத்துவதற்கு கர்னல் டி.ஈ. லாரன்ஸ் என்பவரின் மரணம்தான் முக்கிய காரணம். இரண்டு சிறுவர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக அவர் மோட்டார் சைக்கிளை வளைத்து கீழே விழுந்து விபத்தில் இறந்தார். அவரின் மரணத்திற்கு பின்பே ஹெல்மெட் அணியும் வழக்கம் வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+