வைரஸ், பாக்டீரியாவிலிருந்து பாதுகாப்பு! இந்தியாவில் கியாவின் புதிய கார் அறிமுகம்.. சிறப்புகள் என்ன?
டெல்லி: வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பான செல்டோஸ் ஃபேஸ்லிப்ட் எஸ்யூவி காரை கியா நிறுவனம் இந்தியாவில் இறக்கியுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கப்படுகிறது.
கார் என்றால் அப்படியே கப்பல் போல் அழகாக செல்ல வேண்டும், ஸ்மூத்தாக இருக்க வேண்டும் என பலர் நினைப்பதுண்டு. இதற்காக கோடிக்கணக்கில் பலர் கார்களை செலவு செய்து வாங்குகிறார்கள். அப்படி கோடிக்கணக்கான மதிப்புடைய வெளிநாட்டு கார்களுக்கு இணையாக தற்போது இந்தியாவில் வந்துள்ளன.

அந்த வகையில் பலர் விரும்புவது கியா நிறுவனத்தின் கார்கள். பிஎம்டபிள்யூவில் உள்ள ஆப்ஷன்கள் கியாவில் உள்ளன. அதனால் பலரது சாய்ஸ் கியாவாக இருக்கிறது. கியாவில் செல்டோஸ், கேரன்ஸ் உள்ளிட்ட வகைகள் உள்ளன. இதில் பேசிக் மாடல், மிடில் மாடல், டாப் மாடல் என உள்ளன.
இதில் டாப் மாடல் காஸ்ட்லியானது. கியா கேரன்ஸ் டாப் மாடல் காரின் விலை ரூ 21 லட்சம். மிட் மாடல் ரூ 17 லட்சம் வருகிறது. பேசிக் மாடல் 13 லட்சமாகும். செல்டோஸின் விலை ரூ 14லட்சம். இதில் ஸ்டியரிங் ஸ்மூத்தாக இருக்கிறது. மியூசிக்கல் சிஸ்டம் இருக்கும் டச் திரை மிகவும் பெரியதாகவும் அனைவரும் பயன்படுத்தும் படி எளிதாகவும் இருக்கிறது.

இதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாகும். இந்த நிலையில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் எனும் காம்பாக்ட் எஸ்யூவி காரை கியா மோட்டார்ஸ் நிறுவனம் இறக்கியுள்ளது. இந்த புதிய காரில் பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் 2023 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகள் ஜூலை 14 ஆம் தேதி தொடஙகுகின்றன.
இந்த கார் 3 வேரியன்ட்களில் கிடைக்கின்றன. அவை எக்ஸ் லைன், ஜிடி லைன் மற்றும் டெக் லைன் ஆகியவை ஆகும். புதிய செல்டோஸ் காரில் 17 அதி நவீன அம்சங்களைக் கொண்ட மிக மேம்பட்ட நிலை 2 ADAS பொருத்தப்பட்டுள்ளது. ADAS என்றால் Advanced Driver Assistance Systems ஆகும். இது ஒரு எலக்ட்ரானிக் சிஸ்டமாகும். இவை நவீன் தொழில்நுட்பங்கள் மூலம் ஓட்டுநர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த ஏடிஏஎஸ் இந்தியாவில் ஈவி6 போன்ற சூப்பர் பிரீமியம் கார்களில் காணப்படுகிறது. செல்டோஸ் 15 பாதுகாப்பு அம்சஙகள் உள்பட 32 பொது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருக்கும்.இதில் உள்ள ரோபஸ்ட் 15 ஸ்டாண்ட்ரட் சேப்டி பேக்குளை உள்ளடக்கி இருக்கும். வாகனம் 11 ஆக்டிவ் சேப்டியையும் கொண்டுள்ளது. இந்த வாகனம் 10 இன்ச் கொண்டது. இதில் வழிகாட்டும் கருவி இருக்கிறது.
நல்ல காற்றோட்டமான இருக்கைகள், 8 ஸ்பீக்கர்கள் உள்ளன. வைரஸ் , பாக்டீரியாவில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா உள்ளது. இத்தனை சிறப்புகள் இருப்பதால் இந்த காரை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications