இந்த மாடல் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்த கியா நிறுவனம்.. ஏன் தெரியுமா?
டெல்லி: கார் உற்பத்தி நிறுவனமான கியா அதன் கேரன்ஸ் மாடல் கார்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவற்றை திரும்ப பெற்றுள்ளது.
இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என்றால் பலருக்கு அலாதி பிரியம்தான். சிறு வயதில் இருந்தே ஒரு பைக்கையோ காரையோ பார்த்துவிட்டு அதை வாங்கலாம் என எண்ணம் இருக்கும். அது போன்ற சிறு வயது கனவுகளை படித்து சம்பாதிக்கத் தொடங்கியதும் வாங்கிவிடுவார்கள்.
இந்த பைக் வாங்குவது என்றால் ஜாவா, ஹார்லி டேவிடசன், ஹேனீஸ் உள்ளிட்ட வகை வாகனங்களை வாங்க விரும்புகிறார்கள். அது போல் கார்களில் ஹேண்டா அமேஸ், பிஎம்டபிள்யூ, கியா கேரன்ஸ், கியா செல்டாஸ் உள்ளிட்ட கார்கள் மீது மக்களுக்கு நாட்டம் அதிகமாக இருக்கிறது.

இதில் கியா நிறுவனத்தின் கார்கள் மீது தற்போதுள்ள இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் எழுந்துள்ளது. காரணம் இது கிட்டதட்ட பிஎம்டபிள்யூ காரை போல் இருக்கிறது. இந்த வகை கார்கள் அரை கோடி, அல்லது 1 கோடி என விலை உள்ளது. ஆனால் கியா கேரன்ஸ் கார்களின் விலை அதிகபட்சமாக 36 அல்லது 37 லட்சங்களில் முடிந்து விடுகிறது.
இதனால் இளைஞர்கள் கியா நிறுவன கார்களை விரும்புகிறார்கள். அதில் ஸ்டியரிங் மிகவும் ஸ்மூத்தாக இருக்கிறது. 6 ஏர்பேக்குகள் கிடைக்கின்றன. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கிறது. இந்தியாவில் அதி விற்பனையாகும் 3ஆவது மாடல் கார்கள் இவையாகும். இந்த நிலையில் தற்போது கியா கேரன்ஸ் 30 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக கியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து கியா நிறுவனத்தின் அறிக்கையில் பிராண்டின் உலகளாவிய தரத்தால் நிர்வகிக்கப்படும் வழக்கமான சோதனைகள் மற்றும் கூறுகளின் கடுமையான சோதனைகளை நடத்துகிறது. இலவச மென்பொருள் புதுப்பிக்கப்படும். செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு இடையே தயாரிக்கப்பட்ட மாடலின் மொத்தம் 30,927 யூனிட்களை திரும்ப பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
கியா நிறுவனம் அறிவித்தபடி பாதிக்கப்பட்ட கேரன்ஸ் உரிமையாளர்கள் இந்த அறிவிப்பின்படி நேரடியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில், Carens MPVக்கான புதிய டாப்-டையர் வேரியண்ட்டை கியா அறிமுகப்படுத்தியது. இது லக்ஸரி என அழைக்கப்படுகிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் என இரு வகையாகவும் கிடைக்கிறது.
இந்த மாறுபாடு லக்ஸரி மற்றும் லக்சுரி பிளஸ் டிரிம்களுக்கு இடையில் அமர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குகிறது. Carens Luxury க்கான விலைகள் ₹17 லட்சத்தில் தொடங்கி ₹17.70 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. புதிய Kia Carens Luxury வகை பிரத்யேகமாக ஏழு இருக்கைகள் கொண்ட MPV ஆகும். கடந்த ஆண்டு கியா நிறுவனம் மீண்டும் கேரன்ஸை திரும்ப பெற்றது. சாப்ட்வேர் தொடர்பான பிரச்சினையை சரி செய்ய திரும்ப பெற்ற நிலையில் இந்த முறை 2ஆவது முறையாக கியா கேரன்ஸ் மீண்டும் திரும்ப பெறப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications