இவி, கார் பைக்குன்னு ஓடினீங்களே.. டிரம்ப் போட்ட கையெழுத்தை பார்த்தீங்களா.. டீசல் கார் ஓனர்கள் ஹேப்பி
சென்னை: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார்.
உலகம் முழுக்க மக்கள் இடையே EV கார், பைக் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இந்த மோகத்திற்கு பின்னணியில், மார்க்கெட் மாறியதே காரணம். உலகம் முழுக்க வெப்பமயமாக்கலுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. இதன் காரணமாக உலகின் பல நாடுகள் இவி வாகனங்களை வாங்க ஊக்குவிக்கின்றன.

இந்தியாவிலும் கூட கடந்த மாதம் வரை இவி வாகனங்களை வாங்க வரி விலக்கு, சலுகைகள், நிதி உதவிகள் கூட வழங்கப்பட்டு வந்தன. இது போக காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐநா பல நாடுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு இவி வாகனங்கள் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் போக மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் காலியாக தொடங்கி உள்ளது. உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் அடைந்து உள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை உலக நாடுகள் பல வாங்குவது இல்லை. இப்படி பல காரணங்களால் இவி வாகனங்கள் அதிகம் விற்கப்படுகிறது.
டிரம்ப் கொள்கை மாற்றம்
ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப், மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
இந்த உடன்படிக்கையில் பிடன், கையெழுத்திட்ட காரணத்தால் அமெரிக்காவில் பல இடங்களில் சிஎன்ஜி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கச்சா எண்ணெய் இறக்குமதி, ஏற்றுமதியும் குறைக்கப்பட்டது. இதற்கு பதிலாக இவி வாகனங்கள் களமிறக்கப்பட்டன.
ஆனால் டிரம்ப் இது இரண்டையும் நிராகரித்து உள்ளார். டிரம்ப் உத்தரவின் பெயரில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அதோடு கச்சா எண்ணெய், சிஎன்ஜி ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதோடு சிஎன்ஜி எடுக்க ஊக்குவிக்கப்படும், ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள், ஆலைகளை அரசு மீண்டும் திறக்கும் என்று கூறி உள்ளார்.
என்ன மாற்றம் ஏற்படும்?
டிரம்ப்பின் இந்த உத்தரவு காரணமாக பின்வரும் மாற்றங்கள் வரும்;
1. உலக அளவில் டீசல் வாகனங்கள் மீண்டும் அதிகரிக்கும்.
2. இவி வாகனங்கள் நீண்ட காலம் உழைப்பது இல்லை. அதோடு செமி கான்டெக்ட்ர் உற்பத்தி கடினம், செலவு அதிகம்.
3. இவி வாகனங்கள் அடிக்கடி தீ பிடிக்கும் பிரச்சனையை கொண்டு உள்ளதால் அதன் விற்பனை குறையும்.
4. இந்தியாவில் இவி வாகனங்களுக்கான சலுகை நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் பலரும் டீசல் வாகனங்கள் பக்கம் மறுபடியும் செல்வார்கள்.
சீனாவின் BYD கார்கள் உலகம் முழுக்க அதிகமாக விற்பனை ஆகிறது. அமெரிக்காவிலேயே கூட டெஸ்லாவிற்கு போட்டியாக BYD வர தொடங்கி உள்ளது. இதை அமெரிக்காவோ, டிரம்ப்போ விரும்பவில்லை. இதனால் அமெரிக்காவின் கை ஓங்கியே இருக்க வேண்டும்.. சீனா இதில் நுழைய கூடாது என்பதால் மீண்டும் பெட்ரோல், டீசல் வாகனங்களை டிரம்ப் ஊக்குவிக்க தொடங்கி உள்ளார்.
இதனால் மீண்டும் டீசல் வாகனங்கள், சாலைகளில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவும் டீசல் வாகனங்களை நடைமுறையிலிருந்து அகற்றும் முயற்சியை தள்ளிப்போடும் என்பதால் டீசல் கார் வைத்திருப்போர் அச்சப்பட தேவையிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் கார்களின் ரீசேல் வேல்யூவும் இனி சறுக்கிக்கொண்டு கீழே போகாது என எதிர்பார்க்கலாம்.
ஃபோக்ஸ்வேகன் குரூப் தனது டிடிஐ டீசல் இன்ஜினை கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம். இது ஃபோக்ஸ்வேகன் ரசிகர்களுக்கு நல்ல செய்தியாகும். டீசல் கார்களை ஓட்டும்போது 80 கி.மீ வேகத்திற்கு பிறகு கிடைக்கும் அந்த புஷ்ஷை அனுபவித்தவர்களுக்கு பெட்ரோல் கார்கள் பெரிதாக பிடிக்காது. எனவே அவர்களுக்கும் இது நல்ல செய்திதான். பேட்டரி வாகனங்கள் தீ பிடிக்குமோ, ஆனாலும் அதுதானே இப்போது அரசால் வலியுறுத்தப்படுகிறது என்ன செய்ய என கையை பிசைந்தவர்களுக்கும் ட்ரம்ப் உத்தரவு முக்கியமானதாகும். முக்கியமாக அமெரிக்க ஆதரவு பெற்ற நிறுவனங்கள் மீண்டும் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications