தீபாவளிக்கு சொந்த காரில் ஊருக்கு போறீங்களா? இந்த ஃபாஸ்டாக் விதியை நோட் பண்ணுங்க.. முக்கியம்
சென்னை: தீபாவளியை முன்னிட்டு மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். பலரும் பேருந்து, ரயில்களில் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இன்னும் பலர் தங்களின் சொந்த கார்களில் ஊருக்கு செல்வார்கள். இப்படி சொந்த கார்களில் ஊருக்கு செல்பவர்கள் சில ஃபாஸ்டாக் விதிகளை கவனிக்க வேண்டும்.
சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. தற்போது இதில் அறிவிக்கப்பட்டு உள்ள இரண்டு விதிகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. அவை என்னென்ன விதிகள் என்று இங்கே பார்க்கலாம்.

NPCI கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய Fastag விதிகளை அமல்படுத்தியது. ஃபாஸ்டாக் பயனர்கள் இந்த புதிய விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. முதலாவதாக, தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
ஃபாஸ்டாக்
இதை தடுக்க பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது. பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது. பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபாஸ்டாக் - இரண்டாவது அறிவிப்பு
இது போக இந்திய ரிசர்வ் வங்கி ஃபாஸ்டாக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. அதாவது இ மேன்டேட் எனப்படும் கட்டமைப்பில் இணைத்து உள்ளது. இது கிரெடிட் கார்டு ஆட்டோபேமெண்ட் போல. அதாவது உங்கள் பாஸ்ட் டாக் கார்டில் பணம் தீர்ந்தவுடன்.. அது மினிமம் பேலன்சுக்கு கீழே வந்தவுடன்.. தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இதில் சேர்க்கப்படும்.
அதாவது நெட்ப்ளிக்ஸ் போன்ற பக்கங்களில் எப்படி தானாக ரீ சார்ஜ் ஆகிறதோ அப்படி. இதற்கு நீங்கள் இ-மேண்டேட் அனுமதி மட்டும் கொடுக்க வேண்டும். அதை கொடுத்தால் போதும் இனி ஒவ்வொரு முறையும் உங்கள் Fastag யை ரீ சார்ஜ் செய்ய வேண்டாம். Fastagக்கிற்கு இ-மேண்டேட் தருவது தற்போது கட்டாயம் ஆகி உள்ளது.
உங்கள் பாஸ்ட்டாக்கில் உள்ள தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைந்தவுடன் இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்து அதில் சேர்க்கும். இதனால் பயனர் மீண்டும் மீண்டும் Fastag ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. மொத்தத்தில், வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டாக் ரீசார்ஜ் செய்யும் தொல்லை இனி இல்லை.
மாற்றங்கள்
தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அறிவிப்பு 1: பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.
அறிவிப்பு 2 : பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.
அறிவிப்பு 3 - பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications