நாடு முழுவதும் சாலைகளில் வருது.. பெரிய மாற்றம்! வாகன ஓட்டிகளுக்கு பட்ஜெட்டில் நிர்மலா செம அறிவிப்பு
சென்னை: நாடு முழுவதும் சாலைகளில் செய்யப்பட முக்கியமான மாற்றம் ஒன்றை பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இன்று புதிய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள். நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.
இந்தியாவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80-ஆக அதிகரிப்பு. அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி இருக்கும். 4 தரப்பு முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். 2024-ல் புதிய இந்தியாவை படைப்போம் சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். 2047ல் புதிய இந்தியாவை படைப்போம்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது. 40,000 ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள் 'வந்தே பாரத்' தரத்தில் புதுப்பிக்கப்படும். "இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சாலைகளில் மாற்றம்: இந்த நிலையில்தான் நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவில் இவி வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் நிதி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாய்ண்ட் இயங்கும்.
வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications