எம்மாடியோவ்.. பகத் கல்யாண நாளில் வாங்கிய கார். . ரூ.2.70 கோடி திமிங்கலத்தில் இத்தனை வசதிகளா?
சென்னை: ஃபஹத் ஃபாசில் அண்மையில் ரூ.2.70 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 (landrover defender 90) ரக சொகுசுக் கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இவரே கேரளத்தில் இந்த ரகக் காரை முதலில் வாங்கிய நபர் ஆவார். அந்த காரில் உள்ள வசதிகளை இப்போது பார்ப்போம்.
மாமன்னன் படத்தில் ரத்னவேலுவாக வாழ்ந்து காட்டி மிரட்டியவர் நடிகர் ஃபஹத் ஃபாசில். அதற்கு முன்பாக கமலின் விக்ரம் படத்திலும் அற்புதமாக நடித்திருப்பார். மலையாளத்திலும், தமிழிலும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் கேரக்டராகவே வாழ்ந்து காட்டுவார். அவரது நடிப்பை பார்த்தால் யாராக இருந்தாலும் மிரண்டு போவார்கள். பகத் பாசில் நடிப்பில் வந்த 'மகேஷிண்ட பிரதிகாரம்', 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்', 'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஜோஜு' ஆகிய படங்கள் அவர் எப்படிப்பட்ட நடிகர் என்பதற்கு ஒரு சாட்சியம் ஆகும்.
ஃபஹத் ஃபாசில் அண்மையில் ரூ.2.70 கோடி மதிப்புள்ள லேண்ட்ரோவர் டிஃபெண்டர் 90 (landrover defender 90) ரக சொகுசுக் கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இவரே கேரளத்தில் இந்த ரகக் காரை முதலில் வாங்கிய நபர் ஆவார்.
ஃபஹத் பாசில் சிறந்த கார் பிரியர் ஆவார். அவர் தன் வீட்டில் போர்ச், மினி கன்ட்ரிமேன், லம்போகினி உரூஸ், ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ 740ஐ உள்ளிட்ட சொகுசுக் கார்கள் வாங்கி வைத்துள்ளார். அந்த வகையில் ரூ.2.70 கோடி மதிப்புள்ள லேண்ட்ரோவர் டிஃபெண்டர் 90 காரை வாங்கி உள்ளார்.
லேண்ட்ரோவர் டிஃபெண்டர் 90 காரில் உள்ள முக்கியமான விஷயங்களை பார்ப்போம். இந்த கார் வரி உள்பட கிட்டத்தட்ட 3 கோடி அளவிற்கு வரும். Land Rover Defender கார் அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் போகும். 5.4 வினாடியில் 0 முதல் 100கிமீ வேகத்தை தொட்டுவிடும்.
4999 சிசியுடன் வி சேப்பில் 8 சிலிண்டர்களும், 4 வால்வுகளும் இருக்கின்றன . 5 லிட்டர் சூப்பர் சார்ஜ் வி8 என்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேக்சிமம் பவர் 518 பிஹெச்பி பவரை 6000 ஆர்பிஎம் இல் தரும். மேக்சிமம் டார்கியூ 625 எனஎம்மை 2500 ஆர்பிஎம் ஆக இருக்கும். இந்த காரின் மைலேஜ் 6.8 கிலோமீட்டர் தான் கொடுக்கும். எனவே 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துக் கொண்டு போனால் தான் வண்டியில் லாங்க் டிரைவ் (600 கிமீ) போக முடியும். டிரான்ஸ்மிசனை பொறுத்தவரை ஆட்டோமெட்டிக் (டிசி), எட்டு கியர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மேனுவலாக ஓவர்டிரைவ் பண்ணலாம். ஸ்போர்ட்ஸ் மோட் கார் ஆகும். எமிசனை பொறுத்தவரை பிஎஸ் 6 பேஸ்2 மாடல் ஆகும். டர்போ சார்ஜரா சூப்பர்சார்ஜரா என்று பார்த்தால் இது சூப்பர் சார்ஜ் ஆகும்.
5018 மில்லி மீட்டர் நீளமும். 2015 மில்லிமீட்டர் அகலமும். 1967 மீட்டர் உயரும் கொண்டது இந்த கார். இதன் வீல் பேஸ் பார்த்தீங்க அப்படீன்னா, 3022 மில்லி மீட்டர் ஆகும். கிரவுண்ட் கிலியரன்ஸ் வந்து 228 மில்லிமீட்டரில் இருக்கும். மொத்த எடை பார்த்திங்க அப்படீன்னா 2603 கிலோ என்கிறார்கள்.

பிரண்ட் சஸ்பென்சனை பொறுத்தவரை காயில் ஸ்பிரிங்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன் கொண்ட டபுள் விஷ்போன் ஆக இருக்கும். ரியர் சஸ்பென்சனை பொறுத்தவரை காயில் ஸ்பிரிங்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷனுடன் பல இணைப்புகள் இருக்கும்.
பிரண்ட் பிரேக் டிஸ்க் ஆகவும், ரியர் பிரேக் வந்து வென்டிலேட்டடு டிஸ்க் ஆகவும் இருக்கும். மினிமம் டர்னிங் ரேடியஸ் பார்த்தீங்க அப்படீன்னா 6.42 மீட்டர்கள் ஆகும். வீல்கள் வந்து அலாய் வீல்கள். பார்க்கிங் சென்சார்கள் முன்னாடியும் பின்னாடியும் இருக்கும். இதுதவிர 360 டிகிரியில் கேமராவும் இருக்கும. கேபிட் பூட் அக்சசும் உள்ளது . அன்டி கிளார் கண்ணாடிகள் எல்லாமே எலக்ட்ரானிக்கில் இயங்கும்..












Click it and Unblock the Notifications