ரூ.3000 இருந்தால் போதும்! வருடம் முழுக்க டோல் கட்டணம் கிடையாது! Fastag வாழ்நாள் பாஸ் பெறுவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டோல் கேட்டுகளுக்கான லைப் டைம் இ பாஸ் விரைவில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் முதல் கட்டமாக ஒரு சிலருக்கு மட்டும் சோதனை முறையில் இந்த பாஸ் பெற அனுமதி வழங்கப்படும்.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக டோல் கேட்களை கிராஸ் செய்ய விரைவில் வாழ்நாள் பாஸ் பாஸ்ட் டேக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. GIS அடிப்படையிலான மென்பொருளுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. சுமார் 100 சுங்கச்சாவடிகளைக் கண்காணிக்க இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை கழகம் முடிவு செய்துள்ளது. டோல் பிளாசாவில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால்.. அதாவது வரிசையில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக வாகனங்கள் இருக்கும் போது அதை புதிய சென்சார் உதவியுடன் கண்காணிப்பார்கள். ​​நேரலை கண்காணிப்பு அமைப்பு மூலம் நெரிசல் கண்காணிக்கப்பட்டு அதற்கான எச்சரிக்கைகள் விடுக்கப்படும்.

டோல் பிளாசாக்களில் தடையற்ற இயக்கத்தை மேம்படுத்த, இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவன லிமிடெட் (IHMCL)டோல் பிளாசாக்களில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை 'நிகழ்நேர கண்காணிப்பு' மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இணையம் வழியாக சுமார் 100 சுங்கச்சாவடிகளை NHAI ஆய்வு செய்து வருகிறது.

Fast Tag How to avail toll-free rides with new annual or lifetime passes


வருடாந்திர பாஸ்

இந்த நிலையில்தான் வருடாந்திர பாஸ், வாழ்நாள் பாஸ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அடிக்கடி நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள் இனி புதிய வருடாந்திர மற்றும் வாழ்நாள் பாஸ்கள் பெற முடியும். இதன் மூலம் வருடாந்திர அளவில் குறைந்த அளவு டோல் கட்டணங்களை செலுத்த முடியும்.

FASTagsல் இனி ₹3,000 ரூபாய்க்கு வருடாந்திர பாஸ் அல்லது 15 ஆண்டுகளுக்கு வாழ்நாள் பாஸ் ₹30,000க்கு பெற முடியும். இதற்கான திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போதைய மாதாந்திர பாஸ்களின் விலை ஆண்டுக்கு ₹4,080 ஆகும். ஆனால் இந்த முறையில் நீங்கள் 10 டோல் கேட்களை கிராஸ் செய்தால் ஒரு கேட்டிற்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. மற்ற கேட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த முறையை நீக்கி எல்லா கேட்களுக்கு எப்போதும் கட்டணம் இலவசம் என்ற முறை வரப்போகிறது. அதோடு இந்த கட்டணத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த திட்டத்தை மதிப்பாய்வு செய்து வருகிறது.

இந்த முறை மே 1 முதல் அமலுக்கு வரலாம் என்கிறார்கள். ஆனால் இதில் ஒரு செக் உள்ளது. இந்த பாஸ் எடுத்தால் எக்ஸ்பிரஸ் வே, சிறப்பு தேசிய சாலைகளில் கட்டணம் எப்போதும் போல செலுத்த வேண்டும்.. அங்கே இந்த கட்டணம் பொருந்தாது என்று கூறப்படுகிறது. மக்களின் பயணச் செலவைக் குறைக்கும் வகையில் அமைச்சர் நிதின் கட்கரி இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இது நெடுஞ்சாலைப் பயணத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தலாம்.

பாஸ்ட் டாக் விதிகள் மாற்றம்

சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ஃபாஸ்டாக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. அதாவது இ மேன்டேட் எனப்படும் கட்டமைப்பில் இணைத்து உள்ளது. இது கிரெடிட் கார்டு ஆட்டோபேமெண்ட் போல. அதாவது உங்கள் பாஸ்ட் டாக் கார்டில் பணம் தீர்ந்தவுடன்.. அது மினிமம் பேலன்சுக்கு கீழே வந்தவுடன்.. தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இதில் சேர்க்கப்படும்.

அதாவது நெட்ப்ளிக்ஸ் போன்ற பக்கங்களில் எப்படி தானாக ரீ சார்ஜ் ஆகிறதோ அப்படி. இதற்கு நீங்கள் இ-மேண்டேட் அனுமதி மட்டும் கொடுக்க வேண்டும். அதை கொடுத்தால் போதும் இனி ஒவ்வொரு முறையும் உங்கள் Fastag யை ரீ சார்ஜ் செய்ய வேண்டாம். Fastagக்கிற்கு இ-மேண்டேட் தருவது தற்போது கட்டாயம் ஆகி உள்ளது. உங்கள் பாஸ்ட்டாக்கில் உள்ள தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைந்தவுடன் இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்து அதில் சேர்க்கும்.இதனால் பயனர் மீண்டும் மீண்டும் Fastag ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. மொத்தத்தில், வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டாக் ரீசார்ஜ் செய்யும் தொல்லை இனி இல்லை. தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அறிவிப்பு 1: பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும்.

அறிவிப்பு 2 : பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். .

அறிவிப்பு 3 - பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.

டோல் கேட் புகார்கள்

FASTag முறையின் மூலம் பலருக்கும் அதிக அளவிலான அல்லது எதிர்பார்க்காத அளவிலான சுங்க வரி வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் டோல் கேட் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Take a Poll

டோல் கேட்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நிதின் கட்கரி, டோல் கேட் தொடர்ந்து செயல்படும். அதன் கட்டணம்தான் சாலைகள் கட்ட, சாலைகள் பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. அந்த சாலைகளை தொடர்ந்து பயன்படுத்து டோல் அவசியம். அதனால் டோல்கள் நீக்கப்பட்டது. டோல் தொடர்ந்து செயல்படும், என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்கு இடையே டோல்கள் மீது கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. அதாவது வழக்கமான கட்டணத்தை விட பல இடங்களில் 100-200 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

உதாரணமாக ஒரு டோல் கேட்ட கடக்க கட்டணம் 450 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அந்த டோல் கேட்டை கடந்த பின் அந்த கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பதிலாக ரூ. 650 வசூலிக்கப்படுவதாக கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. ஒருவர் இருவர் என்று இல்லாமல் இப்போது நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக புகார் வைக்க தொடங்கி உள்ளனர்.தங்களுக்கும் இதேபோல் சுங்கவரி கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நெட்டிசன்கள் புகார் வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+