தமிழகத்தில் இணைக்கப்படும் முக்கிய நகரங்கள்! மத்திய அரசின் 3 மெகா சாலை திட்டம்! கேட்கவே சிலிர்க்குதே
சென்னை: தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சாலை திட்டங்களுக்கான டிபிஆர் அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருகிறது. இந்த திட்டங்களை விரைவில் தொடங்கும் விதமாக டிபிஆர் அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு டெண்டர் விட உள்ளது. அந்த திட்டங்களின் டிபிஆர் குறித்து இங்கே பார்க்கலாம்.
விக்கிரவாண்டி சாலை: சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி விக்கிரவாண்டி வழியாக செல்லும் சாலைக்கான கடைசி டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. 6 ஆண்டு தாமதத்திற்கு பின் இறுதி டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் அங்கே பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை காலம் அந்த சாலையில் லேன் மாறி மாறி.. பலர் பயணம் செய்து இருப்பார்கள். இந்தியாவில் இருக்கும் மோசமான சாலைகளில் ஒன்றாக அந்த சாலை திகழ்ந்து வந்தது. தற்போது அந்த கொடூரத்திற்கு முடிவு கட்டப்பட உள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மேற்கொண்ட ஆய்விற்கு பின் இங்கே நடக்கும் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தை கடந்த வாரம் ஆய்வு செய்தது கவனம் பெற்றுள்ளது.
இதனால் இத்திட்டம் தேவையான உந்துதலைப் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இத்திட்டம் டெல்டா பகுதிக்கான முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை கொடுக்கும். விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய வழித்தடமாக அமையும்.
இரண்டாவது திட்டம் சென்னை சாலை: இது போக சென்னை உள்ளே போக்குவரத்து நெரிசலை குறைக்க.. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழியாக சாலையாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டுப்பள்ளி துறை முகத்தை மனதில் வைத்து இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கிண்டி கத்திப்பாரா - மணலி இடையே 100 அடி சாலை, இருளியூர் - புழல் இடையே சென்னை புறவழிச்சாலை, வண்டலூர் - மீஞ்சூர் இடையே சென்னை புறவழிச்சாலை உட்பட பல முக்கிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், சரக்கு லாரிகள் முதல் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த சாலைகள் 24 மணி நேரமும் டிராஃபிக்கில் சிக்கி தவித்து வருகின்றன. இதற்கு தீர்வு காணவே தற்போது 10 வழி சாலை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ராமேஸ்வரம் சாலை; அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையில் 8 சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம். இந்த புதிய சாலையானது தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தமிழ்நாடு வந்த நிலையில்தான்.. இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
ஆனால் இதில் முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே நிதி செலவிட்டு சாலை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவை மதுரை வழியாக செல்ல வேண்டிய தேவையை தவிர்த்து ராமேஸ்வரத்திற்கு நேரடியாக செல்ல முடியும். இதனால் 2 மணி நேரம் பயண நேரம் குறையும். இதற்கான டிபிஆர் தயாரிக்கும் பணிகள் விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகாசி, அருப்புக்கோட்டை, பார்த்திபனூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் SH42 வழியை நான்கு-வழி நெடுஞ்சாலையாக விரிவுபடுத்துவதை இந்த திட்டம் முதன்மையாக கொண்டு உள்ளது. இதில் முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே நிதி செலவிட்டு சாலை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி தற்போது விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொச்சி-தனுஷ்கோடி சாலையில் ராமேஸ்வரம் செல்லும் முன் மதுரைக்கு செல்ல வேண்டும். மதுரை வழியாகவே அவர்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இனி அந்த நிலைமை மாறும்.












Click it and Unblock the Notifications