ஜிஎஸ்டி சாலையில் இனி நோ டிராபிக்.. 20 நிமிஷத்தில் சல்லுன்னு போகலாம்.. தாறுமாறாக மாறுது தாம்பரம்
சென்னை: நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இங்கே மீதமுள்ள பகுதிகளை 5.38 கோடியில் முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது.
மப்பேடு மற்றும் நெடுங்குன்றத்தில் ஏற்கனவே உள்ள இருவழிச் சாலைகளை ஆறுவழிப் பாதையாக விரிவுபடுத்தும் திட்டம் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சாலை அமைக்கப்பட்டால், வேளச்சேரி மற்றும் அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசல் மிகுந்த ஜிஎஸ்டி சாலையை கடந்து பெருங்களத்தூரை 20-30 நிமிடங்களில் அடையலாம்.

எம்எஸ்ஐ சாலையில் ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பை பெருங்களத்தூருடன் இணைக்கும் 8.8 கி.மீ., திட்டம், 10 ஆண்டு கால தாமதத்திற்கு பின், கடந்த ஜூலை மாதம் புத்துயிர் பெற்றது. ஆனால் மீண்டும், நிலம் கையகப்படுத்துதல் சிக்கல்கள் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
குறிப்பாக பெருங்களத்தூரில் வன கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தில் நீடித்து வரும் தாமதம் குறித்து தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரக்தியை வெளிப்படுத்தி வந்தனர். முக்கியமாக எட்டு மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு ஒப்பந்ததாரர்களும் ஒப்பந்தம் செய்யப்படாத காரணங்களால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளாமல் மாநில நெடுஞ்சாலை துறை காலம் தாழ்த்தி வந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில்... விடுபட்ட மற்ற இணைப்புகளில் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மப்பேடு, நெடுங்குன்றம் வழியாக செல்லும் சாலையை ஓராண்டுக்குள் அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட பாதைகள் தவிர, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், எதிரெதிர் போக்குவரத்தைப் பிரிப்பதற்காக, மத்திய மீடியனில் விபத்துத் தடுப்புகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன.
மழைக்காலங்களில் போக்குவரத்து தாமதத்தை மோசமாக்கும் நீர் தேங்குவதைத் தடுக்க இங்கே புதிய மழைநீர் வடிகால் நிறுவப்படும். பைபாஸ் முழுவதும் நீர் ஓட்டத்தை நிர்வகிக்க முக்கிய இடங்களில் ஏழு கான்கிரீட் பாக்ஸ் கட்டப்படும். இதன் மூலம் கனமழையின் போதும் இங்கே டிராபிக் ஜாம் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கே மீதமுள்ள பகுதிகளை 5.38 கோடியில் முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது. மப்பேடு மற்றும் நெடுங்குன்றத்தில் ஏற்கனவே உள்ள இருவழிச் சாலைகளை ஆறுவழிப் பாதையாக விரிவுபடுத்தும் திட்டம் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.
அவுட்டர் ரிங் ரோடு: இது போக சென்னையில் அமைக்கப்பட உள்ள 10 வழி சாலை இந்தியாவிலேயே பெரிய சாலையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அமைக்கப்படும் சாலைகளில் மட்டுமன்றி.. உலகில் அமைக்கப்படும் சாலைகளிலேயே பெரிய ரிங் ரோடு சாலையாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு இந்த சாலை கட்டப்பட உள்ளது. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) என்பது, எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையாகும். காட்டுப்பள்ளி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது.
5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவாயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் கட்டப்படும் புதிய பாலங்கள்.. முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க -
தேசிய நெடுஞ்சாலைகளில் விஐபி கலாச்சாரம் ஒழியும்! அதிகாரிகளுக்கு சுங்கக்கட்டண விலக்கு ரத்து! திட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications