ஹைதராபாத், பெங்களூருவை தொடர்ந்து சென்னையில் தடம் பதிக்கும் டெஸ்லா.. அடுத்த வாரமே
சென்னை: அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது 'எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை இந்த வாரம் சென்னையில் திறக்க உள்ளது. இதன் மூலம், ஹைதராபாத் மற்றும் பெங்களூருவை அடுத்துத் தென்னிந்தியாவில் தனது 3-வது கிளையையும், இந்தியாவில் 6-வது கிளையையும் டெஸ்லா நிறுவனம் தொடங்கி உள்ளது.
2026-ஆம் ஆண்டில் இதுவரை இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட டெஸ்லா கார்கள் விற்பனையாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 38 கார்கள் விற்பனையாகி இருக்கிறது. நடப்பு செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 150 டெஸ்லா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மின்சார வாகனச் சந்தை வேகமெடுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டில் இதுவரை 19,700-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது.

பி.எம்.டபிள்யூ, மெர்சிடீஸ் பென்ஸ் , போர்ஷே , வோல்வோ மற்றும் பி.ஒய்.டி போன்ற ஆடம்பரக் கார் நிறுவனங்கள் சேர்ந்து இதுவரை சுமார் 800 மின்சார ஆடம்பரக் கார்களை விற்பனை செய்துள்ளன (டெஸ்லாவின் விற்பனை எண்ணிக்கையைத் தவிர்த்து).
இந்தியாவில் டெஸ்லா மாடல்கள் & விலை விவரங்கள்:
டெஸ்லா நிறுவனம் தற்போது Model Y ரகத்தில் இரண்டு மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது:
மாடல் வை பிரீமியம் ஆர்.டபிள்யூ.டி (Model Y Premium RWD):
விலை: ₹50.89 லட்சம்
சிறப்பம்சங்கள்: 5 பேர் அமரக்கூடிய வசதி, 2,138 லிட்டர் பூட் ஸ்பேஸ் (Storage), 5.9 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் மற்றும் 500 கி.மீ வரை மைலேஜ் (Range) தரும் பேட்டரி.
மாடல் வை எல் ஏ.டபிள்யூ.டி (Model Y L AWD - 6 Seater):
விலை: ₹61.99 லட்சம் முதல்
சிறப்பம்சங்கள்: கூடுதல் இடவசதியுடன் 3 வரிசைகள் மற்றும் 6 இருக்கைகள், 2,539 லிட்டர் பூட் ஸ்பேஸ், 5 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் மற்றும் 681 கி.மீ வரை செல்லும் பேட்டரி மைலேஜ் திறன்.
இந்த இரண்டு மாடல்களையும் டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம்; இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படும். மேலும், வீடுகளிலேயே சார்ஜ் செய்துகொள்ளும் வசதியையும் டெஸ்லா வழங்குகிறது. சர்வதேசப் பாதுகாப்பு அமைப்புகளின் மிகயுயர்ந்த பாதுகாப்புச் சான்றுகளைப் பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் திறக்கப்படும் இந்த மையம், தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் ஆடம்பர மின்சார வாகனச் சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது பிடியை மேலும் வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
