மாருதியில் எந்த வண்டி சார்.. இவ்வளவு உருண்டும் நல்லா இருக்கே.. ஓட்டுநர் எப்படி ஓட்டுறாரு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாருதி சுஸுகி ஜிம்னி கார் ஒன்று சிறிய மலைக்குன்றில் மூன்று முறை உருண்ட பிறகும் அதன் ஓட்டுநர் ஒன்றுமில்லை சார், நன்றாகத்தான் இருக்கிறேன் என்று கூறி வாகனத்தை ஓட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த பலர் வாகனத்தை பாராட்டி வருகிறார்கள். சில வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அப்பளம் போல் நொறுங்கிவிடும் நிலையில், இதன் உறுதிதன்மை பலரையும் அசரவைத்துள்ளது.

கார் பிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாகனங்களின் மீது காதல் இருக்கும். அவர்கள் வாங்கிய முதல் கார் தொடங்கி, மிகத்தரமான ஆடம்பரமான கார்கள் பலருக்கும் விறுப்பான தேர்வாக இருக்கும். சில கார்கள் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருந்தாலும், விபத்துகளில் சிக்கும் போது, மிகவும் மோசமான நிலையை அடைகின்றன.

Automobile car Maruti

இதனால் கார் வாங்குவோர் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்.. கார்கள் வேகமாக செல்லும் போது, கட்டுப்பாட்டை இழக்காத நிலை தொடர வேண்டும். எவ்வளவு வேகமாக சென்றாலும் கட்டுப்படுத்தக்கூடிய வாகனங்களையே வாகன ஓட்டுநர்கள் விரும்புகிறார்கள். அதன்பிறகே மைலேஜ், அழகு, வடிவமைப்பு, வசதிகள் போன்றவற்றை பார்க்கிறார்கள்.

அந்த வகையில் இந்தியாவை பொறுத்தவரை மாருதி சுஸுகி கார் அதிக அளவில் விற்பனையாகும் கார்களில் தொடர்கிறது. இதில் மிகவும் மலிவான மாருதி என்றால் ஆல்டோ கே10 தான். இதின் ஆரம்ப விலை ரூ. 3.99 லட்சம் ஆகும் . மாருதியில் மிகவும் விலையுயர்ந்த கார் என்றால் இன்விக்டோ கார் என்கிறார்கள் இதன் விலை Rs. 25.21 லட்சம் ஆகும். மாருதி ஸ்விப்ட் (Rs 6.49 லட்சம்), மாருதி brezza (Rs 8.34 லட்சம்), மாருதி எர்டிகா (Rs 8.69 லட்சம்) போன்றவை மாருதியில் உள்ள பிரபலமான கார்களாகும்.

இந்நிலையில் மாருதி சுஸுகி ஜிம்னி கார் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் : மாருதி சுஸுகி ஜிம்னி கார் ஒன்று சிறிய மலைக்குன்றில் மூன்று முறை உருண்ட பிறகும் அதன் ஓட்டுநர் ஒன்றுமில்லை சார், நன்றாகத்தான் இருக்கிறேன் என்று கூறி வாகனத்தை ஓட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த பலர் வாகனத்தை பாராட்டி வருகிறார்கள்.

மாருதி சுஸுகி ஜிம்னி கார் குறித்த இந்த வீடியோ பாதுகாப்பு சோதனைக்காக சதீஸ்கரில் நடத்தப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது. மாருதி கார் எவ்வளவு பாதுகாப்பானது என்பதற்கு இது உதாரணம் என்கிறார்கள் கார் ஓட்டுநர்கள். மாருதி சுஸுகி ஜிம்னி கார் விலை 12 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. உள்ளூர் வரிகள் சேர்த்தால் விலை இன்னும் அதிகமாக இருக்கும். இந்த காரில் 16 முதல் 19 கிமீ மைலேஜ் கிடைக்கும்.. என்ஜினின் சிசி திறன் 1462 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெட்ரோல் வாகனம் ஆகும். இதில் நான்கு சீட்கள் உள்ளது. இது ரேட்டிங்கில் 3.3 என்கிற அளவில் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+