Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு முழுக்க வாகன ஓட்டிகளுக்கு.. KYV அவசியம்! காரை வீட்டிலிருந்து வெளியே எடுக்கணும்னா.. இது கட்டாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல பிரிவுகளில் வாடிக்கையாளர் குறித்த தகவல்களை (KYC) அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், இப்போது 'வாகனம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளும்' (KYV) புதிய நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்டேக்கைச் சீராக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த 'KYV', நாடு முழுக்க வாகனங்களை வைத்துள்ளவர்களுக்கு கட்டாயமாகிறது.

இந்த KYV நடைமுறைக்கு என்ன அவசியம்?

ஃபாஸ்டேக் முறைகேடுகள் அதிகரித்ததே இதற்குக் காரணம். சில லாரி ஓட்டுநர்கள், கார்களுக்கான ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க ஒரு நாடு தழுவிய பாதுகாப்பை உருவாக்க வேண்டியது அவசியம். இதன் விளைவாகவே KYV அறிமுகம் செய்யப்பட்டது.

Automobile fastag

KYV என்றால் என்ன?

2024 அக்டோபர் 31 முதல் கட்டாயமாக்கப்பட்ட இந்த நடைமுறையின் கீழ், அனைத்து ஃபாஸ்டேக் பயனர்களும் தங்கள் வாகனம் மற்றும் பதிவுச் சான்றிதழின் படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், ஃபாஸ்டேக் சரியான வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க முடியும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்தத் திட்டத்தை, தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) அறிவித்துள்ளது. மோசடிகளைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம்.

இது ஒருமுறை மட்டும் செய்யக்கூடிய செயல்முறை என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் இந்தச் சரிபார்ப்பு மீண்டும் செய்யப்பட வேண்டும். இதனால், தரவுகள் எப்போதும் புதுப்பிக்கப்பட்டு, ஃபாஸ்டேக் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு அரசு அதிகாரி இதுகுறித்து விளக்கமளிக்கையில், "சிலர் தங்கள் ஃபாஸ்டேக்குகளை வாகனக் கண்ணாடியில் ஒட்டாமல், பைகளிலும் பணப்பைகளிலும் வைத்திருந்தனர். இதனால், முறைகேடுகள் அதிகரித்தன. கார்களுக்காக வழங்கப்பட்ட ஃபாஸ்டேக்குகள் லாரிகளில் பயன்படுத்தப்பட்டு, குறைந்த சுங்கக் கட்டணம் செலுத்தப்பட்டது. KYV இந்த வகையான முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவரும்" என்றார்.

ஃபாஸ்டேக் பயன்பாடு

ஃபாஸ்டேக் பயன்பாட்டை அதிகரித்து, சுங்கக் கட்டண வசூலை டிஜிட்டல் மயமாக்குவதே இதன் முக்கிய நோக்கம் என்பதால், வங்கிகள் ஃபாஸ்டேக் வழங்கும் போது சற்று அலட்சியமாக இருந்திருக்கலாம் என ஒரு ஆதாரம் தெரிவித்தது. KYV ஆனது இந்த முறைகேட்டை சரி செய்ய, பிரச்சனைகளை சீராக்க உதவும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

சாலைப் போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வாகனங்கள் நிறுத்தவோ, வேகம் குறைக்கவோ தேவையில்லாத, தானியங்கி சுங்கக் கட்டண முறையை (MLFF) நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்காக, ஃபாஸ்டேக் சரியான வாகன வகைக்கு ஒதுக்கப்பட்டு, பொருத்தப்பட்டிருப்பதும், அது செயல்படுவதும் மிக முக்கியம்."

அடுத்த 4-5 ஆண்டுகளில், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வழித்தடங்களைக் கொண்ட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் MLFF சுங்கக் கட்டண முறைக்குள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டேக் என்பது மிக முக்கியம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

NPCI வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

NPCI வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அனைத்து ஃபாஸ்டேக்குகளும் KYV விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். இந்தச் செயல்முறை, ஃபாஸ்டேக்கை தனித்துவமான வாகனப் பதிவு எண் (VRN) மற்றும் சேஸிஸ் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது.

ஃபாஸ்டேக் வழங்குநர்கள் "ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டேக்" என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும். மேலும், ஐந்து வருடங்களுக்கும் மேலான அனைத்து ஃபாஸ்டேக்குகளையும் மாற்ற வேண்டும். எனவே, ஃபாஸ்டேக் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனப் பதிவுச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். வாகனத்தின் முன் பக்கப் புகைப்படம், ஃபாஸ்டேக் மற்றும் வாகனப் பதிவு எண்ணுடன் ஒரு பக்கப் புகைப்படம் மற்றும் வாகன அச்சுகளின் படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+