சென்னையில் பெரிய அளவில் மாறப்போகும் போக்குவரத்து.. 7 இடங்களில் வரும் ராட்சச பாலங்கள்.. நோட் பண்ணுங்க
சென்னை; சென்னையில் பல்வேறு இடங்களில் புதிய பாலங்களை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதனால் சென்னையில் வரும் நாட்களில் போக்குவரத்து பெரிய அளவில் மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலவாக்கம், தொரைப்பாக்கம், இளங்கோ நகர், காமராஜர் நகர், கோ சு மணி சாலை, திருகுமாரபுரம் மற்றும் நியூ ஃபாரன்ஸ் சாலை ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டுவதற்கு சென்னை GCC ஒப்புதல் அளித்துள்ளது. பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் ஓட்டேரி நுால் போன்ற நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த பாலங்கள் சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் அதே வேளையில் OMR மற்றும் ECR இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.
ஓஎம்ஆர் இசிஆர் இணைப்பு சாலை:
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சியின் குறுக்கே மூன்று பாலங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
21 கோடியில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர், மணியம்மை தெரு-வீரமணி தெரு, அறிஞர் அண்ணாசாலை-பாண்டியன் சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் 3 இரும்பு பாலங்கள் கட்டப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. 2019 டிசம்பரில் கால்வாயின் குறுக்கே ஆறு இடங்களை குடிமை அமைப்பு இறுதி செய்து வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை இணைப்பு: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.
இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications