15 நாட்களாக பயன்படுத்தப்படாத.. வாகனங்களை அப்புறப்படுத்த முடிவு.. சென்னையில் புது ரூல்.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சாலையில் உள்ள பழைய வாகனங்களை நீக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. சாலை நெரிசலைக் குறைக்கவும், பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 15 நாட்களுக்கும் மேலாக கைவிடப்பட்ட வாகனங்களை கிரேட்டர் சென்னை மாநகராட்சி (ஜிசிசி) பறிமுதல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

15 நாட்களாக ஒரு வாகனம் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு இருந்தால்.. 15ம் நாள் அந்த வாகனம் தொடர்பாக உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.

automobile chennai parking

ஜூலை முதல், சென்னை மாநகராட்சி 1,774 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது, 729 மீட்கப்பட்டது. மீதமுள்ள 1,045 ஏலத்திற்குத் தயாராகி உள்ளது. இதை ஏலம் விடும் நிகழ்வு வெள்ளத் தடுப்பு முயற்சிகளால் தாமதம் ஆனது. மெட்டல் ஸ்க்ராப் டிரேட் கார்ப்பரேஷனின் மூலம் மின்-ஏல தளம் வழியாக ஏலம் நடத்தப்படும், செய்தித்தாள்கள் மற்றும் GCC இன் சமூக ஊடகங்களில் ஏலம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி எச்சரிக்கை விடுக்கப்படும்.

ஸ்பாட் பைன்: இது போக சென்னை மாநகராட்சி நிர்வாகம் GCC ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதற்காக IOB இலிருந்து 468 PoS சாதனங்களைப் பெற்றுள்ளது. இதில் 70 ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு உள்ளது. செயல்படுத்தப்பட்ட சில நாட்களில் 289 பரிவர்த்தனைகள். 5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அபராதம் செய்யும் முறை வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வந்து உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்

மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகளைப் பயன்படுத்தி அபராதத் தொகையை வசூலிப்பார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்தி சொத்து வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக சுமார் 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, சாலை விதிகளை மீறும் போது போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல் பல்வேறு குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எப்படி அமல்படுத்தப்படும்: பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்

இதற்காக UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராஃப்ட்கள் அல்லது காசோலைகள் மூலம் பணம் செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து GCC சாதனங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பைன் நேரடியாக மாநகராட்சிக்கு செல்லும். அதிகாரிகள் பணம் சுருட்ட வாய்ப்பு இல்லை. மாநகராட்சி வருவாயும் உயரும்.

மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் GCC இல் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். இது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும். இதற்காக 15 பறக்கும் படை வாகனங்கள் களமிறக்கப்படும். இந்த சாதனங்கள் இப்போது களமிறக்கப்பட்டு வருகிறது.

ஸ்பாட் அபராதம் விதிப்பதற்காக இன்னும் இரண்டு நாட்களில் அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைப்போம், என்று GCC கமிஷனர் ஜே குமரகுருபரன் கூறி உள்ளார், வாடகைத் தொகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முன்னதாக, அபராதத் தொகையை டிமாண்ட் டிராஃப்ட் அல்லது காசோலையாக வசூலிக்க காகித சலான்கள் வழங்கப்பட்டன. இனி ஸ்பாட் பைன் போடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் சலான்கள் வழங்கப்பட்ட பிறகு பரிவர்த்தனைகளை முடித்து டேட்டாவை அப்லோட் செய்ய ஓரிரு நாட்கள் ஆகும். ஆனால் POS சாதனங்கள் நிகழ்நேர பரிவர்த்தனைகளை உடனுக்குடன் அப்லோட் செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+