அறிமுகமானது ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. என்ன ஸ்பெஷல்?
சென்னை: ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தனது முதல் மாடல்களான Activa e மற்றும் QC1 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Activa e: மாற்றிக்கொள்ள கூடிய பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, அதேசமயம் QC1 நிலையான பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் சார்ஜிங் கேபிள் மூலம் மின்சார சக்தியை பெறுகிறது.
முன்னதாக, ஹோண்டா பிராண்ட் 2050 ஆம் ஆண்டுக்குள், ஜீரோ கார்பன் வெளியேற்றம், அதாவது மாசுபடுத்தாத அளவுக்கு அனைத்து வாகனங்களையும் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. அதில் இது ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.

Activa e: மற்றும் QC1 ஆகியவை ஹோண்டாவால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் மின்சார ஸ்கூட்டர் மாடல்கள் ஆகும்.
ஹோண்டா Activa e
எல்.ஈ.டி ஹெட்லேம்ப் மற்றும் இருபுறமும் டர்ன் இண்டிகேட்டர்கள் கொண்ட ஸ்கூட்டர் இது. இந்த ஸ்கூட்டர்கள் எல்.ஈ.டி வகை டி.ஆர்.எல் முகப்பு விளக்குகளை, அதாவது ஹெட்லேம்ப்களை கொண்டதாக அறிமுகமாகியுள்ளது. சிறிய ஃபுட்போர்டு மற்றும் நீண்ட சீட்டைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. பைக்கின் பின்புறத்தில் டெயில் லேம்ப் யூனிட்டில் "Activa e:" பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது.
சீட்டின் கீழ், இரண்டு 1.5 kWh பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாற்றிக்கொள்ளக்கூடிய பேட்டரி அமைப்பு தரப்பட்டுள்ளது. ஒரே சார்ஜில் 102 கிமீ வரையில் பயணிக்க முடியுமாம். ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட் மற்றும் இகான் ஆகிய மூன்று ரைடிங் மோட் இதில் உண்டு. டிஎப்டி ஸ்க்ரீன் தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் பைக்கை இணைத்துக் கொள்ளலாம். செல்லும் இடத்திற்கான மேப் போடும் நேவிகேஷன் வசதியும் உண்டு. ஹோண்டா Activa e: பர்ல் ஷாலோ ப்ளூ, பர்ல் மிஸ்டி ஒயிட், பர்ல் சிரீனிட்டி ப்ளூ, மேட் ஃபாகி சில்வர் மெட்டாலிக் மற்றும் பர்ல் இக்னியஸ் பிளாக் உள்ளிட்ட ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்.
ஹோண்டா QC1
QC1 2025 ஆம் ஆண்டின் நடுபகுதியில் இந்திய சந்தைக்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்படும். குறைந்த தூர பயணத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், Activa e: மாதிரியே வடிவமைப்பு ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஸ்கூட்டரில் எல்.ஈ.டி. விளக்குகள் இல்லை. அந்த வகையில் இது வித்தியாசப்படுகிறது.
QC1 நிலையான 1.5 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இது ஸ்கூட்டருடன் ஃபுட்போர்டு மேல் வைக்கப்பட்டுள்ள சாக்கெட் மூலம் சார்ஜ் செய்யும் வசதி கொண்டது. QC1-ல் 5-இன்ச் எல்.சி.டி பேனல் உள்ளது. புக்கிங்குகள், ஜனவரி மாதம் தொடங்குகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications