Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்பர் பிளேட் இருந்தால் போதும்.. ஓனர் குறித்து A டூ Z தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு வண்டியின் எண்ணை வைத்து அந்த வண்டியின் தகவல்களை எப்படி எடுக்க வேண்டும்.. இதன் மூலம் நாம் எந்த தரவுகளை எல்லாம் பார்க்க முடியும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

நீங்கள் பழைய வாகனம் ஒன்றை வாங்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால் அந்த வண்டி குறித்தும் அதன் ஓனர் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.. அதற்கு முன்பெல்லாம் அதற்கு ஆர்டிஓ ஆபீஸ் சென்று கேட்க வேண்டும். ஆனால், இப்போது நம்பர் பிளேட் இருந்தாலே போதும் அதையெல்லாம் ஈஸியாக தெரிந்து கொள்ளலாம்.

How To Check Vehicle Owner Details By Number Plate


ஆனால், இப்போது நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே வாகனத்தின் உரிமையாளர் விவரங்களை நம்பர் பிளேட் மூலம் செக் செய்யலாம்.. எப்படி என்று யோசிக்கிறீர்களா.. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

வாகனம்: சாலையில் விபத்து ஏற்பட்டால், விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளரின் சரியான விவரங்களை வைத்திருப்பது அவசியம்.. அப்படி அது இருந்தால் தான் நீங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்ய முடியும். எனவே, இதுபோன்ற நேரங்களில் விபத்தை ஏற்படுத்திய வாகனங்களின் நம்பர் பிளேட்டை போட்டோவாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எளிதாக உரிமையாளர் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பழைய வாகனங்கள்: அடுத்து முக்கிய காரணம் செகண்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்கும் போது தேவைப்படும்.. செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்கும் போது, நீங்கள் வாங்கும் வாகனத்தின் உரிமையாளர் யார் என்ற விவரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களிடம் சரியான உரிமையாளர் தகவல் இல்லையென்றால், வாகனத்தின் நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி உரிமையாளரின் விவரங்களைப் பெறலாம். இதன் மூலம் நீங்கள் ஓனரிடம் இருந்து தான் நேரடியாக வாகனங்களை வாங்குகிறீர்கள் என்பது உறுதி செய்யப்படும்.

எப்படி பார்க்கலாம்: நம்பர் பிளேட் மட்டும் இருந்தால் போதும் பரிவஹன் (Parivahan) இணையதளத்தில் வாகன உரிமையாளர் தரவுகளைப் பார்க்கலாம்.. ஒரு வாகன உரிமையாளர் குறித்த தரவுகளை எப்படி இணையத்தில் பார்க்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

முதலில் பரிவாஹனின் (Parivahan) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.. அடுத்து அங்கு informational services என்பதைக் கிளிக் செய்து, கீழே வரும் மெனுவிலிருந்து Know Your Vehicle Details என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ரொம்ப ஈஸி: நீங்கள் ஏற்கனவே யூசராக இருந்தால்.. உங்கள் தரவுகளைப் பதிவிட்டு லாகின் செய்யவும்.. புதிய யூசர் என்றால் புதிய கணக்கை உருவாக்கவும்.. அடுத்த பக்கத்தில் வாகனப் பதிவு எண் மற்றும் கேப்ட்சாவை பதிவிட்டு 'VAHAN தேடல்' என்பதைக் கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில் உங்களுக்கு அந்த குறிப்பிட்ட வாகனத்தின் உரிமையாளர் குறித்த தகவல்கள் கிடைக்கும். அதில் உரிமையாளர் பெயர் எப்போது வாகனம் வாங்கப்பட்டது.. எப்போது ரெஜிஸ்டர் செய்யப்பட்டது.. இன்சூரன்ஸ் இருக்கிறதா.. இருந்தால் எவ்வளவு காலம் அது செல்லுபடியாகும் என்பது குறித்த விவரங்களை அதில் பெற முடியும்.

இப்படி தான் வெறும் வாகன நம்பரை வைத்து நீங்கள் தேவையான அனைத்து விவரங்களையும் சில நொடிகள் பெற முடியும்... விபத்து ஏற்படும் சமயங்கள் அல்லது பழைய வாகனங்களை வாங்கும் போதும் வாகனம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள இது நிச்சயம் உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+