சம்மரில் காரில் வெளியே போறீங்களா? உள்ளே கூலாக வைத்திருப்பது எப்படி? இதை பண்ணுங்க ரொம்ப ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் இந்த கோடை காலத்தில் காரில் பயணிப்பவர்கள் காரை எப்படி குளிர்ச்சியாக உள்ளே வைத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, கரூர் ஆகிய வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திருச்சி, மதுரை ஆகிய மத்திய மாவட்டங்களிலும். வெப்ப அலை வீசும். நாளை வரை இங்கே வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

How to keep your car cool during your summer drives What you should do

நேற்று நிலவரப்படி, தமிழகத்தின் உள்பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. வடக்கு உள் தமிழ்நாட்டின் பகுதிகளில் இயல்பை விட (சுமார் +4.5 டிகிரி செல்சியஸ்) அதிகமாக இருந்தன.

கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வெப்பச் சலனம் நிலவுகிறது. அதிகபட்சமாக சேலத்தில் பதிவான வெப்பநிலை: 41.5°C (+3.9°C), அதைத் தொடர்ந்து திருப்பத்தூர்: 41.4°C (+4.2°C), கரூர் பரமத்தி: 41.0°C (+4.5°C), வேலூர்: 40.8°C ( +2.9°C), தருமபுரி: 40.7°C (+4.5°C), ஈரோடு: 40.7°C (+3.3°C) & திருச்சிராப்பள்ளி: 40.5°C (+3.1°C). திருத்தணி, நாமக்கல் பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ் பதிவானது. மதுரை (நகரம் & விமான நிலையம்), சென்னை (MBK), கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூரில் 39°C முதல் 40°C வரை பதிவானது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் 34°C முதல் 37°C (இயல்புக்கு மேல் 2-3°C) மற்றும் மலைப் பகுதிகளில் 23°C முதல் 28°C வரை பதிவாகியுள்ளது (சில பாக்கெட்டுகளில் சாதாரண அதிகபட்ச வெப்பநிலையை விட குறிப்பிடத்தக்க அளவு குறிப்பிடத்தக்கது. ) சென்னை (MBK) சாதாரண அதிகபட்ச வெப்பநிலையான 39.6°C (+4.3°C)க்கும் அதிகமாகவும், NBK சாதாரண வெப்பநிலை 36.7°C (+2.4°C)க்கும் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.

கார் சூடு: வெயில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் இந்த கோடை காலத்தில் காரில் பயணிப்பவர்கள் காரை எப்படி குளிர்ச்சியாக உள்ளே வைத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

கோடை காலங்களில் பொதுவாக கார் உள்ளே சூடாவது வழக்கம். ஏசி போட்டாலும் கூட கார் உளேள் கடுமையாக சூடு ஆகும் வாய்ப்புகள் உள்ளன. பின்வரும் விஷயங்களை செய்தால் அதை தவிர்க்க முடியும்.

- விண்ட்ஷீல்ட் கவர் பயன்படுத்தவும்
- பார்க் செய்யும் போது கார்களை நிழலான பகுதிகளில் நிறுத்த முயற்சி செய்யுங்கள்
- காரின் ஒரே ஒரு விண்டோவை கொஞ்சம் கீழே இறக்கி வைத்திருக்கவும்.
- window visorsகளைப் பயன்படுத்தவும்
- உங்கள் இருக்கைகளை ஒரு வெள்ளை துண்டு போட்டு மூடி வைக்கவும்
- Solar ventilated fans எனப்படும் சூரிய காற்றோட்ட விசிறிகள் பயன்படுத்தவும்.

வாகனத்தை நிழலில் நிறுத்தி இருக்கும் போது ஏசி ஆன் செய்யவும், சூடான இடத்தில் ஏசி ஆன் செய்தால் சிக்கல் ஆகும். உள்ளே ஏசி குளிர் வந்தபின் கார் உள்ளேயே ஏசி சர்குலேஷன் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். வெளியே உள்ள சூடான காற்று ஒவ்வொருமுறையும் உள்ளே வந்தால் காரின் உள்ளே சூடு குறையாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+