டிரம்ப் - எலான் மஸ்க் மோதலால்.. தமிழ்நாட்டிற்கு வந்த குட் நியூஸ்.. எல்லாம் சாதகமாக மாறுதே! சூப்பர்!
சென்னை: தமிழ்நாட்டில் டெஸ்லா நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கார் உற்பத்தி செய்யும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வதை எதிர்த்து வருகிறார். முக்கியமாக ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதை டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் எலான் மஸ்க்கும் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை செய்யாமல் இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் - மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. மஸ்க் நேரடியாக அமெரிக்க பார்ட்டி என்ற கட்சியையும் தொடங்கி உள்ளார். அங்கே மஸ்க்கிற்கு இந்தியர்கள் ஆதரவும் அதிகரித்துள்ளது. டிரம்ப் இந்தியர்களுக்கு எதிராக இருப்பதால்.. மஸ்க் பக்கம் இந்தியர்கள் செல்ல தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக டெஸ்லா இந்தியாவிற்கு உற்பத்தி தொழிற்சாலையை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
டெஸ்லா உற்பத்தி தமிழ்நாடு
இது தமிழ்நாட்டிற்கும் சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டின் இருக்கும் வலுவான EV கட்டமைப்பு மற்றும் வலுவான கார் உற்பத்தி சுற்றுசூழல் காரணமாக டெஸ்லாவின் மையத்திற்கான முதல் தேர்வாக தமிழ்நாடு மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், சென்னை அல்லது தமிழ்நாட்டின் வேறு பகுதியில் இவி உற்பத்தி மையம் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி டெஸ்லா நிறுவனம் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் நிலம் தேடுகிறது. இந்தியாவின் 40% EVகளை தமிழ்நாடு உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் திறமையான தொழிலாளர்கள், துறைமுக அணுகல் மற்றும் சென்னையில் உள்ள ஆட்டோ ஹப் ஆகியவை இதற்கு சாதகமாக உள்ளது.
சமீபத்தில்தான் வியட்நாம் EV தயாரிப்பு நிறுவனமான VinFast தூத்துக்குடியில் $2 பில்லியன் முதலீடு செய்தது.
தமிழ்நாடு தொடரும் முதலீடு
இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. தமிழ்நாடு அரசு இ வாகனங்களுக்கான கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டு அதற்கான சலுகைகளையும் உடனுக்குடன் அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் வழியாக டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழிற்துறை அதிகாரிகள் தீவிரமான ஆலோசனைகளை செய்து வருவதாகவும் தொழிற்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா கார், பேட்டரி மூலம் இயங்க கூடிய கார்களில் உலகில் முதன்மையான காராக இருக்கிறது. அதேபோல் இதன் நிறுவனர் எலான் மஸ்க் உலகில் முக்கியமான தொழில் அதிபராக இருக்கிறார். இவர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர மாநிலங்கள்
கடலோர மாநிலங்களை இதற்காக டெஸ்லா கவனித்து வருகிறதாம். பல்வேறு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக டெஸ்லாவின் கிகா தொழிற்சாலையை இந்தியாவின் எதாவது ஒரு கடலோர சிட்டியில் அமைக்க டெஸ்லா ஆலோசனை செய்து வருகிறது. இப்போதைக்கு சென்னை, குஜராத், தெலுங்கானா ஆகியவை டெஸ்லாவின் லிஸ்டில் உள்ள பகுதிகள் ஆகும். இவற்றில் ஒன்றை டெஸ்லா டிக் செய்ய வாய்ப்புகள் உள்ளதாம்.
டெஸ்லா முதலீடு
இந்தியாவில் பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் நேரடியாக உற்பத்தியை மேற்கொள்ள டெஸ்லா நினைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை கடுமையாக கண்டித்து உள்ளார். இந்தியாவில் அவர் முதலீடு செய்ய விரும்ப காரணம் வரி மட்டுமே. அதிக வரி காரணமாக நேரடியாக இந்தியாவில் பேக்ட்ரி கட்ட விரும்புகிறார். இந்தியா அதிகம் வரி போடுகிறது. முக்கியமாக வெளிநாட்டு கார்களுக்கு அதிக இறக்குமதி வரி போடுகிறது. இதற்காக நேரடியாக அங்கே டெஸ்லா உற்பத்தி மையத்தை உருவாக்க மஸ்க் நினைக்கிறார். அது பெரிய தவறு. அமெரிக்காவிற்குத்தான் சிக்கல், என்று டிரம்ப் பாய்ந்து உள்ளார். டெஸ்லா உற்பத்தி மையம் மகாராஷ்டிரா அல்லது தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications