Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராயல் என்பீல்டுக்கு நிஜமான போட்டி ஆரம்பம்! உலகிலேயே விலைகுறைந்த ஹார்லி டேவிட்சன் இந்தியாவில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் ஹார்லி டேவிட்சன், அதன் புகழ்பெற்ற 100 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக மிக மிக விலை குறைந்த புது மாடல் பைக்கை வெளியிட்டு உள்ளது.

இந்திய மார்க்கெட்டில் கோலோச்சும் டாப் எண்ட் மாடல் பைக் என்றால் அது ராயல் என்பீல்டுதான். தற்போது வீட்டிற்கு ஒரு புல்லட் என்று சொல்லும் அளவிற்கு விலை அதிகம் இருந்தாலும் கூட மார்க்கெட்டில் இவர்கள்தான் டாப்பில் இருக்கிறார்கள்.

Huge competitor for Royal Enfield: What you should know about the new Harley Davidson X440 Launched

இந்த நிலையில் ராயல் என்பீல்டுக்கு போட்டியாக ஹார்லி டேவிட்சன் பைக் தனது விலை குறைந்த மாடலை களமிறக்கி உள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சினை தளமாகக் கொண்ட வாகன உற்பத்தியாளர் மில்வாக்கி, இரு சக்கர வாகனத் துறையில் இந்தியாவில் டாப்பில் உள்ள Hero MotoCorp இரண்டும் சேர்ந்துதான் இந்த புதிய மாடலை வெளியிட்டு உள்ளன.

ஹீரோ நிறுவனம் ஹூண்டாய் உடன் உறவை முறித்துக்கொண்ட பின் தனியாக பைக் தயாரித்து வந்தது. இந்த நிலையில் அந்த உறவு முறிவிற்கு பைக் தயாரிக்க வேறு ஒரு பெரிய நிறுவனத்துடன் கைகோர்ப்பது இதுவே முதல்முறை. தி மில்வாக்கி - ஹீரோ இணைந்து இந்த புதிய மலிவான Harley Davidson மாடலை வெளியிட்டு உள்ளது.

ஹார்லி டேவிட்சன் X440 என்பதுதான் இந்த மாடலின் பெயர். இது சிங்கிள் சிலிண்டர், 440சிசி மோட்டார் சைக்கிள் ஆகும். இது ராயல் என்ஃபீல்டின் 350சிசி வண்டியை விட கொஞ்சம் நல்ல திறன் கொண்ட , அதற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட பைக்காக பார்க்கப்படுகிறது.

Huge competitor for Royal Enfield: What you should know about the new Harley Davidson X440 Launched

இதன் ஷோரூம் விலை - ₹ 2.3 லட்சம் ஆகும். ஆன் ரோடு விலை 2.5- 2.7 லட்சம் வரை இருக்கும். ஏற்கனவே அதிகம் விற்பனையாகும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-ன் டாப் மாடலை விட சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இந்த ஹார்லி மாடல் அதிகம். இதனால் தற்போது பலரும் ஹார்லி பக்கம் திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பாக இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மலிவான ஹார்லி நைட்ஸ்டர், விலை 17.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

இதை வாங்குவது பலருக்கும் எட்டா கனவு என்ற நிலையில்தான் தற்போது ஹார்லி டேவிட்சன் X440 வெறும் இரண்டரை லட்சத்திற்கு களமிறக்கப்பட்டு உள்ளது. மொத்தம் இந்த ஹார்லி மாடலில் மூன்று வகைகள் உள்ளன - பேசிக் வகை 'டெனிம்' ₹ 2.29 லட்சத்திற்கும், மிட்-ஸ்பெக் 'விவிட்' ₹ 2.49 லட்சத்திற்கும் மற்றும் டாப் ஸ்பெக் டிரிம் 'எஸ்' ₹ 2.69 லட்சத்திற்கும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம விலைகள் ஆகும்.

ஆன் ரோடு விலை இதைவிட 30 ஆயிரம் வரை அதிகம் இருக்கலாம். இந்த மோட்டார் சைக்கிள் ரெட்ரோ ஸ்ட்ரீட் ஸ்டைல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, ஹார்லி XR1200 இலிருந்து இன்ஸ்பயர் ஆன மாடல் போல உள்ளது. பொதுவாக ஹார்லியில் இருக்கும் வழக்கமான நீட்டிக்கப்பட்ட க்ரூஸர் வடிவமைப்பைப் போலல்லாமல் இதில் கொஞ்சம் மாறுபட்ட தோற்றம் உள்ளது.

இது, 27 பிஎஸ் பவர், 38 என்எம் டார்க் மற்றும் ஆறு கியர் கொண்ட பாக்ஸைக் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 25 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்க முடியும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. ஆனால் ஆன் ரோடில் இந்திய சாலைகளில் இது 20 ஆக குறையும் வாய்ப்புகள் உள்ளன.

இதன் அடிப்படை வேரியண்டில் சக்கரங்கள் வயர் ஸ்போக்ஸ் உடன் வருகிறது. அதே நேரத்தில் அதிக விலை கொண்ட வேரியண்டில் வகைகள் அலாய் வீல்கள் மற்றும் இரண்டு-டோன் வண்ணங்களுடன் வருகின்றன. ராயல் என்ஃபீல்டுக்கு போல இல்லாமல், இந்த ஹார்லியில் KYB 43mm சஸ்பென்ஷன் உள்ளது. இதை தலைகீழாக அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் ஃபோன் இணைப்பு அம்சங்களுடன் 3.5 இன்ச் TFT டிஸ்ப்ளே உள்ளது. மிக முக்கியமாக எரிபொருள் எவ்வளவு இருக்கும், எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதையும் இது காட்டுகிறது. இந்த அளவிற்கு குறைவான விலையில் இதற்கு முன் ஹார்லி தனது பைக்கை வெளியிட்டதே இல்லை என்பதால் இந்திய பைக் மார்க்கெட் ஹார்லி அறிவிப்பை பார்த்து ஆடிப்போய் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+