2024ல் SUV கார் வாங்க திட்டமா? ஹூண்டாய் Creta ஃபேஸ்லிஃப்ட் அறிமுக தேதி அறிவிப்பு.. என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் 2024ஆம் ஆண்டில் பல புதிய SUV ரக கார்கள் களம் இறங்குகின்றன. அந்தவகையில், ஆண்டின் தொடக்கத்தியேயே, ஜனவரி 16ம் தேதி, பொங்கல் முடிந்த கையோடு, புதுப் பொலிவுடன் அறிமுகம் ஆகிறது ஹூண்டாய் க்ரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் (creta facelift launch date).

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட் ரேஞ்ச் எஸ்யூவி கார்களில் முன்னணியில் இருப்பது ஹூண்டாய் கிரெட்டா. மற்றும் கியா ஷெல்டாஸ் ஆகும். இரண்டுமே ஒரே கொரியன் நிறுவனத்தின் இரு பிரிவுகள் என்பது இதில் சிறப்பாகும். நடுத்தர விலை கொண்ட பிரீமியம் கார் போட்டியில் கடுமையான போட்டியை கொடுத்து வருகிறது ஹூண்டாய் கிரெட்டா. இந்த சூழலில் ஹூண்டாய் நிறுவனம், க்ரெட்டாவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

Hyundai creta facelift to launch on January 16: price and specifications

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வரும் ஜனவரி 16ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இப்போதுள்ள கிரெட்டாவே விற்பனையில் சக்கை போடு போட்ட போதிலும், புது ஃப்யூச்சர்களுடன், புது லுக்கில் ஃபேஸ்லிப்ட் செய்கிறது ஹுண்டாய். க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் பல வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் அப்டேட்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டர்போ (Turbo) பெட்ரோ என்ஜின் உடன் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் வரும் எனத் தெரிகிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு வரும் புதிய க்ரெட்டாவைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது மற்ற நாடுகளில் விற்கப்படும் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் போல இருக்காது. ஹூண்டாய் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மாடல்களுக்கு இணையான வித்தியாசமான தோற்றத்துடன் இந்த கார் வர உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்களின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி, ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரில், முன்புறமும், பின்புறமும் LED லைட்டுகள், மாற்றப்பட்ட பம்ப்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல் ஆகிய டிசைன் அப்டேட்கள் உள்ளதாக தெரிகிறது.

Hyundai creta facelift to launch on January 16: price and specifications

அதேபோல, உட்புறம், புதிதாக வடிவமைக்கப்பட்ட டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் இருக்கப்போகிறது. துல்லிய காட்சிகளுடன் கூடிய 360 டிகிரி கேமரா அமைப்பு ஆகியவையும் உள்ளதாகத் தெரிகிறது. புதிய இண்டீரியர் தீமையே, ஹூண்டாய் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

என்ஜினை பொறுத்தவரை, 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு புதிய 1.5லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DCT இணைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. டீசல் ஆப்ஷனை எடுக்காமல் வைத்திருப்பது, டீசல் கார்களை விரும்பி ஓட்டுவோருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

இந்தியாவில் வரும் 2024 ஜனவரி 16ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார். ஏற்கனவே சந்தையில் உள்ள க்ரெட்டா ஷோரூம் விலை: ரூ. 10.87 லட்சம் முதல் 20 லட்சம் வரை உள்ளது. இந்நிலையில், க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் லாஞ்ச் ஆகும்போது அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. ஆனால் போட்டி கடுமையாக இருப்பதால் விலையேற்றம் ரொமப் பெரிதாக இருக்காது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+