இதுதான் ரொம்ப அவசியம்.. டெல்டாவில் அமைக்கப்படும் சூப்பர் ரிங்ரோடு.. வந்தது முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மன்னார்குடி ரிங்ரோடு அமைப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்டம் -1, பகுதி - ஏவின் முதல் டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. மன்னார்குடி மேலவாசல் (தஞ்சாவூர் நெடுஞ்சாலை) முதல் சொக்கனாவூர் வரை (மன்னார்குடி முதல் திருமக்கோட்டை சாலை வரை) ஒரு கட்டமாகவும் மன்னார்குடி முதல் ஒரத்தநாடு, மன்னார்குடி முதல் சேதுபாவசமுத்திரம், மன்னார்குடி முதல் அதிராம்பட்டினம் வரை இன்னொரு கட்டமாக இந்த ரிங் ரோடு அமைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ரிங் ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மன்னார்குடியைச் சுற்றி 22 கி.மீ.க்கு ரிங்ரோடு அமைக்கப்படும். இதற்கான டெண்டர் சில நாட்களில் விடப்பட உள்ளது.

automobile

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம சாலைகளைத் தவிர மூன்று மாநில நெடுஞ்சாலைகளையும் இந்த சாலை இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் ரிங் ரோடு அமைக்கப்படும் மிக முக சிறிய நகரமாக மன்னார்குடி மாறி உள்ளது. தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அங்கே பேருந்து நிலையம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் ரிங் ரோடு அமைப்பது மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . முன்மொழியப்பட்ட சுற்றுச் சாலையுடன் கிராமப்புற சாலைகளை இணைப்பதன் மூலம் விவசாய விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு மிக எளிதாக கொண்டு செல்ல முடியும்.

ரிங் சாலை கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டினம் சாலையை இணைக்கும் (மாநில நெடுஞ்சாலைகள் எண். 66); திருவாரூர்-மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலை (SH எண். 22); மன்னார்குடி-சேதுபாவசமுத்திரம் சாலை (SH எண். 46); மற்றும் மன்னார்குடி-திருமக்கோட்டை-சொக்கனாவூர் சாலை உள்ளிட்ட பிற சாலைகள்; மன்னார்குடி-ஒரத்தநாடு-திருவோணம் சாலை மற்றும் ஒரு சில கிராமப்புற சாலைகளை இது இணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

உத்தேச ரிங்ரோடு மூன்றாம்சேத்தி, பாமினி, அரவத்தூர், ராமாபுரம், கைலாசநாதர் கோயில், நாங்கம்சேத்தி, சேரங்குளம், கொப்பிராலயம், நெடுவாக்கோட்டை, குமாரபுரம், கரிக்கோட்டை, மேலவயல், மூவாநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்கள் வழியாகச் செல்லும்.

பணிகள் நடக்கிறது: சுற்றுச் சாலையுடன் இணைக்கப்படும் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட ஆட்சியர் மு.மதிவாணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து அனைத்து கிராமங்களுக்கும் சென்று திட்டப் பணிகள் குறித்த நேரடித் தகவல்களைப் பெற்றார். மன்னார்குடி நகரில் 73 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் ரூ. 2.75 கோடி. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

பட்ஜெட்: இது போக நேற்று பட்ஜெட்டில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்தப்படும். 18 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை சாலைகள் அகலப்படுத்தப்படும். 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.300 கோடியில் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு செய்யப்படும, என்று பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+