ரூ.126 கோடி.. எதிர்பார்க்காத வேகம்.. டெல்டாவில் வருது ராட்சச ரிங் ரோடு..அதுவும் எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மன்னார்குடி ரிங்ரோடு அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த நிலையில் 30% பணிகளை முடித்துள்ளனர். அதாவது சாலையை அமைப்பதற்கான மட்டுப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன.

மன்னார்குடி மேலவாசல் (தஞ்சாவூர் நெடுஞ்சாலை) முதல் சொக்கனாவூர் வரை (மன்னார்குடி முதல் திருமக்கோட்டை சாலை வரை) ஒரு கட்டமாகவும் மன்னார்குடி முதல் ஒரத்தநாடு, மன்னார்குடி முதல் சேதுபாவசமுத்திரம், மன்னார்குடி முதல் அதிராம்பட்டினம் வரை இன்னொரு கட்டமாக இந்த ரிங் ரோடு அமைக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ரிங் ரோடு அமைக்கப்படும் மிக முக சிறிய நகரமாக மன்னார்குடி மாறி உள்ளது.

automobile

தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அங்கே பேருந்து நிலையம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் ரிங் ரோடு அமைப்பது மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . முன்மொழியப்பட்ட சுற்றுச் சாலையுடன் கிராமப்புற சாலைகளை இணைப்பதன் மூலம் விவசாய விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு மிக எளிதாக கொண்டு செல்ல முடியும்.

மன்னார்குடி ரிங் ரோடு விவரம்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ரிங் ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மன்னார்குடியைச் சுற்றி 22 கி.மீ.க்கு ரிங் ரோடு அமைக்கப்படும்.

டெண்டர் விபரம் : முதல் கட்ட சாலைக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன

சாலை அகலம்: இரண்டு லேன் பெரிய வாகனங்கள் செல்ல + இரண்டு லேன் இரண்டு பக்கமும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

திட்டத்தின் மதிப்பு: இந்த திட்டத்திற்கு 126 கோடி ரூபாய் மொத்தமாக செலவிடப்பட உள்ளது.

பணிகள் எப்போது தொடங்கியது - எப்போது முடியும் : நவம்பர் 2024ல் பணிகள் தொடங்கியது - 2026 ஆகஸ்டில் பணிகள் நிறைவு பெறும்

எங்கெல்லாம் இந்த சாலை செல்லும்?: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம சாலைகளைத் தவிர மூன்று மாநில நெடுஞ்சாலைகளையும் இந்த சாலை இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரிங் சாலை கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டினம் சாலையை இணைக்கும் (மாநில நெடுஞ்சாலைகள் எண். 66); திருவாரூர்-மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலை (SH எண். 22); மன்னார்குடி-சேதுபாவசமுத்திரம் சாலை (SH எண். 46); மற்றும் மன்னார்குடி-திருமக்கோட்டை-சொக்கனாவூர் சாலை, மன்னார்குடி-ஒரத்தநாடு-திருவோணம் சாலை மற்றும் ஒரு சில கிராமப்புற சாலைகளை இது இணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

எந்தெந்த கிராமங்களில் பணிகள் நடக்கின்றன?

மூன்றாம் சேத்தி, பாமினி, அரவத்தூர், ராமாபுரம், கைலாசநாதர் கோயில், நாங்கம்சேத்தி, சேரங்குளம், கொப்பிராலயம், நெடுவாக்கோட்டை, குமாரபுரம், கரிக்கோட்டை, மேலவயல், மூவாநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்கள் வழியாகச் செல்லும் என்பதால் அங்கே பணிகள் நடக்கின்றன..

இதற்காக மன்னார்குடி நகரில் 73 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் ரூ.2.75 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது தனியாக நடைபெற்று வருகிறது. மன்னார்குடியில் ஏற்கனவே சிப்காட் அமைக்கப்பட உள்ளது.

இந்த ரிங் ரோடு சாலை அருகே சிப்காட் அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்கான டெண்டர் இன்னும் விடப்படவில்லை. ரிங் ரோடு கட்டுமானம் குறிப்பிட்ட சதவிகிதத்தை அடைந்த பின் நிலம் அடையாளம் காணப்பட்டு டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பேருந்து நிலையம் + சிப்காட் + புதிய பாலங்கள் + ரிங் ரோடு என்று மன்னார்குடி புதிய மாற்றங்களை சந்திக்க தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+