Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

GST: ரூ.1.29 லட்சம் வரை.. அதிரடியாக குறைந்த மாருதி கார்கள் விலை.. எந்த மாடல் எவ்வளவு குறைப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு கார்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்த புதிய வரி முறை அமலுக்கு வரும் நிலையில், இதன் மூலம் பல்வேறு கார்களின் விலையும் கணிசமாகக் குறைகிறது. புதிய வரி அமலுக்கு வரும் இந்தச் சூழலில் மாருதி சுசுகி நிறுவனம் தனது பல்வேறு கார் மாடல்களுக்கான விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.!

மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி முறையில் மிகப் பெரிய மாற்றத்தைச் செய்திருந்தது. அதாவது முன்பு ஜிஎஸ்டி 4 அடுக்குகளாக இருந்த நிலையில், அது இரு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டது. 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு பொருட்களின் வரி விகிதம் கணிசமாகக் குறைந்தது.

Maruti Suzuki New Car Prices After GST Rate Cut What is the Updated Price for Alto Swift and More

புதிய ஜிஎஸ்டி

குறிப்பாகப் பலரும் எதிர்பார்த்த கார்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பு வெளியானது. அதன்படி பெட்ரோலில் 1200 சிசிக்கு குறைவாக இருக்கும் கார்கள், டீசலில் 1500 சிசிக்கு குறைவாக இருக்கும் கார்களின் ஜிஎஸ்டி 28%ல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டது. அதேநேரம் பெட்ரோலில் 1200 சிசிக்கு மேல் இருக்கும் கார்கள், டீசலில் 1500 சிசிக்கு மேல் இருக்கும் கார்களுக்கு ஜிஎஸ்டி 40%ஆக உயர்த்தப்பட்டது. மேலும், எலக்டிரிக் கார்களை போலவே ஹைபிரிட் கார்களுக்கும் 5% மட்டும் ஜிஎஸ்டி என அறிவிக்கப்பட்டன.

குறைப்பு

ரூ.10 லட்சத்திற்கும் கீழ் இருக்கும் கார்களுக்கான வரியை குறைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்த சூழலில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்த புதிய வரி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிகள் குறைவதால் விலையும் குறையும் இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி அறிவிப்பு

இதற்கிடையே நாட்டிலேயே அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி நிறுவனம், தான் கார்களின் விலையைக் குறைத்துள்ளன. அதிகபட்சமாக S-Presso மாடல் காரின் விலை ரூ.1.29 லட்சம் வரை குறைக்கப்படுகிறது. குறைந்தபட்சமாக Ertiga மாடல் விலை ரூ.46,000 குறைகிறது. இது தவிர பிரபல ஆல்டோ, ஸ்விப்ட், Dzire என பல்வேறு மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு

  • S-Presso (ரூ.129,600 வரை குறைப்பு) - புதிய விலை ரூ.349,900
  • Alto K10 (ரூ.107,600 வரை குறைப்பு)- ரூ.369,900
  • Celerio (ரூ.94,100 வரை குறைப்பு)- ரூ.469,900
  • Wagon-R (ரூ.79,600 வரை குறைப்பு)- ரூ.498,900
  • Ignis (ரூ.71,300 வரை குறைப்பு)- ரூ.535,100
  • Swift (ரூ.84,600 வரை குறைப்பு)- ரூ.578,900
  • Baleno (ரூ.86,100 வரை குறைப்பு)- ரூ.598,900
  • Tour S (ரூ.67,200 வரை குறைப்பு)- ரூ.623,800
  • Dzire (ரூ.87,700 வரை குறைப்பு)- ரூ.625,600
  • Fronx (ரூ.112,600 வரை குறைப்பு)- ரூ.684,900
  • Brezza (ரூ.112,700 வரை குறைப்பு)- ரூ.825,900
  • Grand Vitara (ரூ.107,000 வரை குறைப்பு)- ரூ.1,076,500
  • Jimny (ரூ.51,900 வரை குறைப்பு)- ரூ.1,231,500
  • Ertiga (ரூ.46,400 வரை குறைப்பு)- ரூ.880,000
  • XL6 (ரூ.52,000 வரை குறைப்பு)- ரூ.1,152,300
  • Invicto (ரூ.61,700 வரை குறைப்பு)- ரூ.2,497,400
  • Eeco (ரூ. 68,000 வரை குறைப்பு)- ரூ.518,100
  • Super Carry (ரூ. 52,100 வரை குறைப்பு)- ரூ.506,100
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+