யாராலும் நம்ப முடியவில்லை! சேஃப்டிக்காக 5 ஸ்டார் வாங்கியது முதல் மாருதி சுஸுகி கார்! வாவ் டிசையர்
சென்னை: ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உலகமுமே இது கனவா அல்லது நனவா என்று தெரியாமல் ஆச்சரியத்தில், இன்றைய தினம் உறைந்துபோய் உள்ளது. இதற்கு காரணம், இத்தனை வருடங்களாக, "tin cans", அதாவது "தகர டப்பா" என்று போட்டி நிறுவனங்களால் கேலி பேசப்பட்ட "மாருதி சுசுகி" நிறுவனம், இன்று தனது "டிசையர்" (Dzire) காருக்கு சர்வதேச புதிய கார் சோதனை ப்ரோக்ராம் (Global NCAP) சோதனை டெஸ்டில் 5 ஸ்டார்களை (Five Star) வாங்கியுள்ளது. டாடா, மஹிந்திரா, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா போன்ற கார்களுக்கு இணையாக இனி பில்ட் குவாலிட்டி உள்ள வண்டி எங்களுடையது என்று நெஞ்சை நிமிர்த்த முடியும் மாருதியால்.
நவம்பர் 11ம் தேதி தனது அடுத்த தலைமுறை டிசையர் காரை மாருதி அறிமுகம் செய்கிறது. இந்த கார்தான் குளோபல் சோதனை அமைப்பான "என்கேப்"-ல் (NCAP) 5 ஸ்டார்களை அசால்டாக பெற்றுள்ளது. இந்தியாவிலுள்ள கார் விற்பனையில் 40 சதவீத பங்கு மாருதி சுசுகியுடையது. அதன்பிறகு நீண்ட தூரத்தில்தான், ஹூண்டாய், மஹிந்திரா போன்ற கார்கள் வரிசையாக வருகின்றன. ஆனால் இதுவரை மாருதி தனது காரை டெஸ்ட் செய்ய என்கேப் அமைப்பிடம் தந்தது இல்லை. கொடுத்தாலும், 2 ஸ்டார் அல்லது 3 ஸ்டார் வரும் வகையில்தான் அதன் பில்ட் குவாலிட்டி இருந்தது. பிரஸ்சா, கிரான்ட் விட்டாரா போன்ற கார்கள் 4 ஸ்டார்களை பெறும் அளவுக்கு தகுதியான பில்ட் கொண்டவைதான். இருப்பினும் மாருதிக்கு ஒரு தயக்கம் இருந்தது. இப்போது, இதுவரை அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான டிசையர் காரை மேம்படுத்தி 5 ஸ்டார்கள் வாங்கி அசத்தியுள்ளது மாருதி.

சுசுகி தற்போது அறிமுகம் செய்வது தனது நான்காம் தலைமுறை டிசயர் ஆகும். விரைவில் ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிப்ட் வரும் நிலையில், டிசையர் பில்ட் குவாலிட்டி குறித்த செய்தி வெளியாகியிருப்பது ஹோண்டாவை பழையபடியும் விற்பனை லிஸ்டில் பின்னுக்கு தள்ள வாய்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Global NCAP டிசையர் காரின் முன் மற்றும் பக்க விபத்து பாதுகாப்பு, பக்கவாட்டு விபத்து பாதுகாப்பு, நடைபாதை பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சோதித்து பார்த்து ரேட்டிங் தருவது வழக்கம். விபத்து சோதனையில், மனிதர்களுக்கு பதிலாக பொம்மை வைக்கப்படும். குறிப்பிட்ட வேகத்தில் மோத வைத்து டெஸ்ட் செய்து பார்க்கப்படும். இந்த டெஸ்டின்போது 'வயது வந்தவர்' பொம்மைக்கு முழு பாதுகாப்பும், 'குழந்தை' பொம்மைக்கு தலை மற்றும் மார்புக்கு நல்ல பாதுகாப்பும் இருந்தது. பக்க விபத்து சோதனையில், தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்புக்கு பாதுகாப்பு நன்றாக இருந்தது. டெஸ்ட் முடிவில், பெரியவர்களுக்கான பாதுகாப்புக்காக 5 ஸ்டாரும், குழந்தைகள் பாதுகாப்புக்கு 4 ஸ்டாரும் கிடைத்துள்ளது. 6 ஏர்பேக், 3 சீட்களுக்கும் சீட்பெல்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால் மொத்தத்தில் காருக்கு 5 ஸ்டார் கிடைத்துள்ளது. இதுவரை எந்த மாருதி சுசுகி காருக்கும் கிடைக்காத பெருமை இதுவாகும். 360 டிகிரி கேமரா இதைவிட அதிக பட்ஜெட்டிலுள்ள பல கார்களில் கூட இல்லை, ஆனால் டிசையரில் தரப்படுகிறது.
The new Maruti Suzuki Dzire scores five stars for adult & four stars for child occupant safety. Fitted with six airbags, #ESC & pedestrian protection as standard, the new Dzire is the first Maruti Suzuki to achieve a five star Global NCAP rating.https://t.co/xYS2MhhHe3 pic.twitter.com/20layXVDDc
— GlobalNCAP (@GlobalNCAP) November 8, 2024
புதிய தலைமுறை டிசையர் காரின் ஆரம்ப விலை ஷோரூம் விலைப்படி 7 லட்சத்திற்கும் குறைவாகவே தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம், மேலும் டாப்-எண்ட் வேரியண்ட் ஷோரூம் விலைப்படி ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கலாம். டாப் எண்ட் ஆன் ரோடு விலை 11 லட்சத்துக்கு மேல் 12 லட்சம் வரை போகலாம் என்று எதிர்பார்க்கலாம். 80 bhp பவர் மற்றும் 111 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையிலான 1.2-லிட்டர் இன்ஜின் இது. மைலேஜை கருத்தில் வைத்து புதியவகை ஸ்விப்ட் போலவே, புதிய டிசையரிலும் மூன்று சிலிண்டர்கள்தான் இருக்கும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மைலேஜாக 25 கி.மீ வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பான மைலேஜ், மாருதி சுசுகியின் நீடித்து உழைக்கும் இன்ஜின்கள், நாடு முழுக்க உள்ள சர்வீஸ் நெட்வொர்க்குகள், சிறப்பான கஸ்டமர் சர்வீஸ் ஆகியவை இதுவரை மாருதியின் பிளஸ் பாயிண்ட்டாக இருந்தது. ஆனால் ஒரே ஒரு குறையாக பில்ட் குவாலிட்டி சொல்லப்பட்டது. ஆனால் டிசையர் அந்த பாக்சையும் டிக் அடித்து ஆல் ரவுண்டராக வெளியே வருகிறது. இது மாருதி ஃபேன்ஸ்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாருதியின் இன்ஜின் பவர் குறைவு என்ற வதந்தி வெகு நாட்களாக பரப்பப்படுவது உண்டு. ஆனால், ஒவ்வொரு கேட்டகிரியிலும் அதன் போட்டியாளர்களை விட மாருதி இன்ஜின் பலம் பொருந்தியதாகவே இருந்துள்ளது. நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வேகமாக இயங்கும் கார்கள், ஓவர் டேக் செய்யும் கார்கள் மாருதியாகத்தான் இருக்கும். மலைப் பிரதேசங்களின் கிங் மாருதிதான். ஆனால், பில்ட் குவாலிட்டி குறித்த விமர்சனம் மட்டும் உண்மையானதுதான். இந்திய மார்க்கெட் பில்ட் குவாலிட்டியை எதிர்பார்க்கிறது என்பதை உணர்ந்ததும் மாருதி அங்கும் தனது முத்திரையை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications