ஆசை ஆசையாக இருந்தார்களே.. வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு.. டோல் கேட் தொடர்பாக.. மத்திய அரசு ஷாக் முடிவு
டெல்லி: நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வந்தது. அமைச்சர் நிதின் கட்கரி இந்த புதிய முறை தொடங்கப்படும் என்று தகவல் வெளியிட்டு இருந்தார். இந்த திட்டத்திலும் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது.. இப்போதைக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க, அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) இருப்பது அவசியம். அரசாங்கம் திட்டமிட்டுள்ளபடி, இது மூன்றாம் தலைமுறை (3ஜி) மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ-கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலமாக இயங்கும்.

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் ஜி.பி.எஸ் ரெக்கார்டுகளை அரசு பெற்று அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும். எனவே, அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் எடுக்கும் சுங்கச்சாவடிகள் ரூட் என்ன என்பதையும் அரசு தெரிந்து கொள்ளும். அவர்கள் எத்தனை டோல் கேட்களைக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து மொத்த டோல் வரியைக் கணக்கிடலாம்.
அதாவது வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.
டோல் கட்டணம்
இதன் மூலம், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக இன்னும் துல்லியமான அரசுக்கு சொந்தமாக சாட்டிலைட்களை வானத்தில் நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. தனியார் சாட்டிலைட் தகவல்கள், துல்லியமற்ற சாட்டிலைட் தகவல்களை நம்பி நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் டோல் கட்டணத்தை விதிக்காமல், புதிதாக இதற்காக சாட்டிலைட் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் இப்போதைக்கு இந்த திட்டத்தை தள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பாஸ்ட் டாக் கட்டண முறை உள்ளது. இந்த சாட்டிலைட் முறை வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சுங்கச்சாவடிகள் மூடப்படும்.
சுங்கச்சாவடி கட்டணம்
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏஜென்சிகள் நவம்பர் மாதத்திற்குள் 5,248 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளை நிறைவு செய்துள்ளன அல்லது விரிவுபடுத்தியுள்ளன.
இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 4,766 கிமீ ஆகும். சுமார் 12,000 கி.மீ.களை நிர்மாணித்து விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் இலக்கு இருந்தபோதிலும், இந்த நிதியாண்டில் இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த இலக்கை அடைவது வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
புதிய திட்டங்களுக்கான ஏலத்தின் வேகம் முந்தைய ஆண்டை விட கணிசமாக குறைந்துள்ளது. 2022-23 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், ஏஜென்சிகள் 5,382 கி.மீ பணிக்கு ஏலம் எடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டு அது 2,815 கி.மீ.யை எட்டவில்லை. பாரத்மாலா கட்டம்-1 அல்லது மாற்று திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது, திட்ட ஏலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது உட்பட பல காரணங்களால் சாலைகள் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு திட்டங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 2024-25 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படும். இனி வரும் ஆண்டுகளில் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் பாரத்மாலா திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களைத் தொடங்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் சாலை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. பாரத் மாலா முதன்மைத் திட்டத்தின் கீழ் 8,000 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் விரைவில் போடப்படும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications