என்ஜினியரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது.. இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை 3 சுற்றுகளாக நடைபெறுகிறது
சென்னை: என்ஜினியரிங் பொது கலந்தாய்வு இன்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. ஆன்லைன் வழியாக இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு இன்று முதல் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொது தரவரிசையில் ஒன்று முதல் 37,796 வரையிலான இடங்களில் உள்ள மாணவ - மாணவிகள் பங்கேற்கலாம்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினியரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த துறை சார் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 1.80 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்த இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்காக சுமார் 2.45 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 2.36 லட்சம் பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கான ரேங்க் பட்டியல் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது.
மொத்தம் 3 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் வழியாக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் சுற்று கலந்தாய்வு இன்று முதல் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் பொது தரவரிசையில் ஒன்று முதல் 37,796 வரையிலான இடங்களில் உள்ள மாணவ - மாணவிகள் பங்கேற்கலாம்.
2-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 3 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பொது தரவரிசையில் 37,977 முதல் 1,31,093 ரேங்க் வரையிலான மாணவ - மாணவிகள் பங்கேற்க உள்ளனர். மூன்றாவது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 17 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பொது தரவரிசையில் 1,31,094 முதல் 2,33,812 வரையில் ரேங்க் பெற்றவகள் பங்கேற்கலாம். அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கும் மூன்று சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான கலந்தாய்வும் இன்று முதல் அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் துணை கலந்தாய்வு அடுத்தகட்டமாக நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications