மதுராந்தகம் கூட்டம்.. மொத்தமாக சொதப்பிய தவெக! கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அப்செட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவினர் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இருந்தாலும் தவெகவின் செயல்பாடுகள் கூட்டணி கட்சி தலைவர்களே அப்செட் ஆகும் அளவுக்கு இருக்கிறதாம். நேற்று முன் தினம் நடந்த சமூக நீதி மதசார்பற்ற வெற்றிக் கூட்டணி கூட்டத்தில், கூட்ட ஒருங்கிணைப்பு கூட தவெகவில் சரியாக இல்லை என்று கூட்டணி தலைவர்கள் ஆதங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், சத்யபாமா தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தவெக சார்பில், ராஜினாமா செய்தவர்களே மீண்டும் நிறுத்தபட்டு இருக்கிறார்கள். இதுவே அந்தகட்சியினருக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Maduranthakam meeting TVK bungles it completely Alliance party leaders deeply upset

கூட்டணி கட்சி தலைவர்கள்

போகும் இடமெல்லாம் வேட்பாளர்களை பொதுமக்கள் விரட்டியடிப்பதையும் பார்க்க முடிந்தது. விஜய் வந்து பிரசாரம் செய்தால் எல்லாம் மாறிவிடும் என்று தவெகவினர் நம்பிய நிலையில், விஜய் பிரசாரம் செய்த பிறகும் களத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்றே தவெகவினரே முனுமுனுப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால்தான் விஜய் மீண்டும் ரோடுஷோவாக கிராமம் கிராமமாக மதுராந்தகத்தில் சுற்றி வந்ததாகவும், நாளை தாரபுரத்தில் ரோடு ஷோ செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருபக்கம் இப்படி என்றால் மற்றொரு பக்கம் தவெக கூட்டணி கட்சி தலைவர்களை தவெக சரியாக ஒருங்கிணைத்து செல்லவில்லையோ என்ற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

விஜய்யே பங்கேற்கவில்லை

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து கடந்த 1 ஆம் தேதி தவெக தலைமையிலான சமூக நீதி மதசார்பற்ற வெற்றிக் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரமால் தவிர்த்தார்..

கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், மாணிக்கம் தாகூர், வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அமைச்சர் ஷாஜஹான் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இந்தந்க் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கவில்லை. முதல்வர் விஜய் பங்கேற்றால் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடும் இதனால் பாதுகாப்பு பிரச்சினைகள் எழக்கூடும் என அவர் தவிர்த்து இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் கூட்ட ஒருங்கிணைப்பிலும் தவெக சரிவர செயல்படவில்லையாம்.

கூட்டணி கட்சி தலைவர்கள் அப்செட்

உதாரணத்திற்கு திருமாவளவன் பேசி முடித்ததும் விசிகவினர் புறப்பட்டு சென்றனர். இதனால் மாணிக்கம் தாகூர் காலி சேர்கள் மத்தியிலேயே பேசிக்கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே தொண்டர்கள் ஒவ்வொருவராக கலைந்து செல்ல மேடையில் இருந்த தலைவர்கள் ஏகத்துக்கும் அப்செட் ஆனதாக சொல்லப்படுகிறது.

முதல்வர் விஜய்தான் பங்கேற்கவில்லை என்றால் கூட்ட ஒருங்கிணைப்பு கூட சரியாக இல்லை என்று கூட்டணி தலைவர்கள் ஆதங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் தவெக மூத்த அமைச்சர்களும் சரி.. விஜய்யும் சரி.. யாரும் அவ்வளவாக கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது. இது கூட்டணி கட்சியினரை மேலும் அப்செட் அடைய வைத்து இருக்கிறதாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+