மொத்தம் 3 பதக்கம்! பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்! கோவையில் உற்சாக வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 3 பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜுக்கு கோயம்புத்தூரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஆசிய போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை மொத்த உலகமும் உற்று நோக்கியிருக்கிறது. பல போட்டிகளில் இந்தியாவின் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. குறிப்பாக ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தியதன் மூலம் இந்தியா நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. ஹாக்கி தவிர தடகள போட்டிகளிலும் இந்தியா சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Vidya Ramraj

வெறித்தனமான விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று அசத்தியிருக்கிறார். 4*400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4*400 மீ கலப்பு தொடர் ஓட்டப்பிரிவி8ல் வெள்ளியும், 400 மீ தடை ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தையும் வித்யா ராம்ராஜ் வென்றிருக்கிறார்.

வெளியே வரக்கூடாது என்று பெண்களை ஒடுக்கி வைத்திருக்கும் நிலைமை இன்றும் கூட நீடிக்கத்தான் செய்கிறது. ஆனால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை வித்யா ராம்ராஜ் தனது சாதனையால் சமூகத்திற்கு புரிய வைத்திருக்கிறார். இந்த சாதனை மூலம் தமிழக இளம்பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார். தமிழக அரசு அவருக்கு ஊக்கத்தொகையை அறிவித்திருக்கிறது.

உற்சாக வரவேற்பு

போட்டிகளை முடித்துக்கொண்டு இன்று காலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த வித்யா ராம்ராஜுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அமைச்சர் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் வித்யா ராம்ராஜ் பேசியதாவது, "பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக மாநில அரசு மற்றும் விளையாட்டுத்துளைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறேன். மத்திய மற்றம் மாநில அரசுகள் அளித்த ஆதரவுதான் இந்த நிலையை அடைய எனக்கு உதவியது.

நேரத்தை குறைக்க தீவிர பயிற்சி

பயிற்சியாளரின் ஊக்குவிப்பு காரணமாக இந்த போட்டியில் கடுமையாக உழைத்தேன். 2023ம் ஆண்டிலிருந்து சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சியின்போது எங்கள் இலக்கு பதக்கத்தை அடைவது கிடையாது. நேரத்தை குறைப்பதுதான். இந்தியா இன்னும் சர்வதேச அளவில் போட்டியிட வேண்டி இருக்கிறது. தற்போதைய சாதனை எனக்கு இன்னும் முழுமையான நிறைவை கொடுக்கவில்லை.

பயிற்சியாளர்களுக்கும் அங்கீகாரம்

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் தொடர்ந்து முழுமையான ஆதரவு அளித்து வருகிறார். இளம் விளையாட்டு வீரர்கள், பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களை நம்பி தீவிரமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கொடுத்திருக்கிறார். எங்களின் வெற்றிக்கு பின்னால் பயிற்சியாளர்களின் உழைப்புதான் இருக்கிறது. எங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பயிற்சியாளர்களுக்கும் கொடுக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரிடம் எடுத்து சொன்னேன். பயிற்சியாளர்களுக்கும் விருது வழங்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+