ஆரோக்கியசாமி, விஷ்ணு பிரசாத் அரசை நடத்துறாங்களா? தலை எது, கால் எது? தவெகவை சாடிய டாக்டர் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல மாநிலங்களில் வருவாய் பன்மடங்கு பெருகியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய சரிவு ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை? என்று தவெக அரசு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி,.

செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, "107 சட்டமன்ற உறுப்பினர்களுடன் நம்பிக்கைக்குப் பாத்திரமற்ற சில அரசியல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்ற விஜய் அரசு, 5 மாதங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளது. பூரண மதுவிலக்கு, ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு, கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் தள்ளாடி வருகிறது.

Dr Krishnasamy Vijay Government Criticism Tamil Nadu Politics

சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முதலமைச்சர் வரை நிர்வாக அனுபவமின்மை, அரசின் பல செயல்பாடுகளிலும் தெளிவாக வெளிப்படுகிறது. தினமும் நடைபெறும் கொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், மக்களின் போராட்டங்கள் ஒருபுறம் இருக்கிறது. இன்னொருபுறம் தொடர் மின்வெட்டு காரணமாக சிறுகுறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சுய மின் உற்பத்தியை மட்டும் நம்பி செயல்படும் அவல நிலை உருவாகியுள்ளது.

இந்த குறைபாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பொருளாதார வளர்ச்சியை முடக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின் வரி வருவாயை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒரு சதவீதக் குறைவும், செப்டம்பரில் ஜிஎஸ்டி வரி வருமானம் ஐந்து சதவீதமும் குறைந்துள்ளது.

பல மாநிலங்களில் வருவாய் பன்மடங்கு பெருகியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய சரிவு ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் பணப்புழக்கம் பெருமளவில் குறைந்து பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. பலருக்கு வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளது.

படுத்துக் கிடக்கும் இந்த அரசை யார் தட்டியெழுப்புவது, எங்கிருந்து தட்டியெழுப்புவது? தலை எங்கே இருக்கிறது, கால் பகுதி எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஆரோக்கியசாமியும் ஒரு விஷ்ணு பிரசாத்தும் அரசை நடத்த முற்பட்டால் இதுபோன்ற விளைவுகள்தான் ஏற்படும்" என்று காட்டமாக எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+