அண்ணன் ஸ்டாலின் பேசியதை எந்த விதத்திலும் ஏற்கவே முடியாது.. ஜோதிமணி எம்பி கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கரூர்: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் திமுகவின் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாராபுரம் த.வெ.க வேட்பாளர்சத்தியபாமா அவர்களை உருவக்கேலி செய்து பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "பெண்கள் பொதுவாழ்விற்கு வருவதும், பொதுவாழ்வில் தொடர்ந்து பயணிப்பதும் எளிதான செயல் அல்ல.பெண் என்பதனாலேயே தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கும், கேலிக்கும் உள்ளாவதை பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடுகிறது.

Cannot accept what Brother mk stalin said Jothimani MP expresses strong opposition

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் திமுகவின் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாராபுரம் த.வெ.க வேட்பாளர்சத்தியபாமா அவர்களை உருவக்கேலி செய்து பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.இதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஒருபெண்ணை உருவக்கேலி செயவது அரசியல் விமர்சனம் அல்ல. இதுபோன்ற பேச்சுக்களை இன்றைய தலைமுறைப் பெண்கள் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதையும் ஆண் தலைவர்கள் உணர வேண்டும். பொதுவாழ்வில் பெண்களின் கண்ணியத்தைக் காப்பதில்ஆண்களுக்கும்,குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.

தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+